நன்றி தினத்தந்தி
நேற்று தினத்தந்தியில் நான் எழுதிய நெல்லை வரலாற்றுச் சுவடுகள் நூல் விமர்சனம் வெளிவந்துள்ளது. வெளியிட்ட தினத்தந்தி நிர்வாகத்துக்கு மிக்க நன்றி -முத்தாலங்குறிச்சி காமராசு
விமர்சனம் வ்ருமாறு.
நெல்லை மாவட்டம் பற்றிய துணுக்கு தோரணமாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. இயற்கை ஆச்சரியங்கள் நிறைந்த பொதிகை மலை, 2004-ம் ஆண்டு சுனாமி அலை கள் தமிழகத்தைத் தாக்கியபோது, திருச்செந்தூரில் மட்டும் கடல் உள் வாங்கியது, சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனையில் இருக்கும் பனைமரக் கட்டையால் செய்யப்பட்ட யானைச் சிற்பம், மணக்கரை மலையில் இருக் கும் வால் முளைச்சான் குகை, சரும நோய் தீர்க்கும் பாண தீர்த்த அருவி, உலகில் முதன்முறையாக கபால அறுவை சிகிச்சை நடைபெற்ற தோரணமலை என்பது போன்ற ஆச்சரியமான 216 தகவல்கள் சிறு, சிறு கட்டுரைகள் வடிவில் தரப்பட்டுள்ளன. (ஆசிரியர்: முத்தாலங்குறிச்சி காமராசு; வெளியீடு: பொன் சொர்ணா; விலை: ரூ.260; செல்போன்: 9442834236)


