பழைய காயலில் நமது பொன்சொர்ணா பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். ‘முற்போக்குக் கவிஞர் க.மு. அவர்களின் வாழ்க்கையும் படைப்புகளும்’ என்ற நூல்தான் அது. பழைய காயல் அன்னபூரணி மக்கள் மன்றத்தில் கடந்த 4-ஆம் தேதி நடந்த இந்த விழாவில், அவருக்கு நினைவேந்தலும் நடைபெற்றது.
கோவங்காடு பஞ்சாயத்துத் தலைவராக இருந்த இவருக்கு, கவிஞர் வாலியால் ‘க.மு.’ எனப் பெயர் சூட்டப்பட்டது. இவரது கவிதைகள் பல 2023 மழை வெள்ளத்தில் அழிந்துபோய்விட்டன. மீதமுள்ள, திரைப்படங்களுக்காக எழுதி முயற்சி செய்த பாடல்களைத் தொகுத்து வெளியிட்டோம். தொகுப்பாசிரியர் அருந்ததி அரசு இதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். என்னை வைத்து நூலை வெளியிட்டார்கள்.
கவிஞர் க.மு. அவர்களின் மகன்கள் க.மு. அன்புராஜ், க.மு. மூர்த்தி உட்படப் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. என்னோடு பயணம் செய்த முனைவர் மணிமொழிச்செல்வன், என்னை வரவேற்ற மஞ்சள்நீர்காயல் ஜெயசங்கர் அய்யா உட்பட அனைவருக்கும் நன்றி!
– முத்தாலங்குறிச்சி காமராசு


