சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு டெலஸ்கோப் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் டெலஸ்கோப் மூலம் தொலைதூர பொருட்களை பார்வையிடுதல் குறித்த பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் எட்வர்ட் ஜான்சன்பால் தலைமை வகித்தார். அறிவியல் மன்ற ஆசிரியை ஜனதா முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி வன்னியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போப் பள்ளியில் வானியல் மன்றத்தை துவக்கிவைத்து மாணவர்களுக்கு தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் வானியல் குறித்தும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


