தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வட்டங்களில் வருகிற 25ம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் 1431-ம் பசலி ஆண்டிற்கு வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) 25.05.2022 முதல் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் அவர்களுக்கெதிரே குறிப்பிடப்பட்ட நாட்களில் பிரதி தினம் காலை 10.00 மணிக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி வட்டம் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 25.05.2022முதல் 01.06.2022 வரை மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், திருச்செந்தூர் வட்டம் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 25.05.2022முதல் 01.06.2022 வரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், ஸ்ரீவைகுண்டம் வட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 25.05.2022முதல் 01.06.2022 வரை தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும்,
எட்டயபுரம் வட்டம் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 25.05.2022முதல் 07.06.2022 வரை கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், சாத்தான்குளம் வட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 25.05.2022முதல் 31.05.2022 வரை, விளாத்திகுளம் வட்டம் விளாதத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 25.05.2022முதல் 07.06.2022 வரை, ஓட்டப்பிடாரம் வட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தலைமையிலும் 25.05.2022முதல் 07.06.2022 வரை,
கோவில்பட்டி வட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் 25.05.2022முதல் 01.06.2022 வரை, ஏரல் வட்டம் ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) தலைமையிலும் 25.05.2022முதல் 03.06.2022, கயத்தார் வட்டம் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் 25.05.2022முதல் 07.06.2022 வரை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக நடைபெறும்.
பொதுமக்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பங்களை அந்தந்த கிராமங்களுக்குரிய வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாளில், கொரோனா தடுப்பு வழிமுறையை பின்பற்றிஇ சமூக இடைவெளியினை கடைபிடித்துஇ வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் கொடுத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


