ஏரல் அருகே விபத்தில் இறந்ததாக கருதப்படும் வாலிபர் கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து புலன் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது தாயார் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், எரல் நடுத் தெருவைச் சேர்ந்த ஆண்டி மனைவி சுயம்பு அம்மாள் என்பவர் தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு : எனக்கு ஒரு மகள் ஐந்து மகன்கள் உள்ளனர். எனது கணவர் காலமாகி சுமார் இருபது வருடங்கள் ஆகிறது. எனது மகள் செல்வபட்டு ‘மகன்கள் கருப்பசாமி, கணேசன், புலமாடன், பட்டுராஜ் ஆகிய நான்கு மகன்களும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர்.
எனது கடைசி மகன் முத்துக்கண் (37) திருமணம் ஆகாமல் என்னுடன் வசித்து வந்து விவசாய வேலைகள் செய்து வந்தான். அவனுடைய வருமானத்தில் தான் நான் வாழ்ந்து வந்தேன். இந்நிலையில் முத்துக்கண் கடந்த 16.01.2022 இரவு கொற்கையிலிருந்து ஏரல் செல்லும் சாலையில் வடக்குபுரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது சம்மந்தமாக ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இம்மானுவேல் ஜெயசேகர் மற்றும் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா ஆகியோர் எனது மகன் பட்டுராஜிடம் அவசர கதியில் புகார் மனு பெற்று வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
எனது மகன் முத்துக்கண் அவருடைய இரண்டு சக்கர வாகனத்தில் அதிவேகமாகவும், ஆஜாக்கிரதையாகவும் ஒட்டி வந்து கவனக்குறைவால் தனக்கு தானே நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி இறந்து விட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளனர். உண்மையில் சம்பவத்தன்று எனது மகன் முத்துக்கண் செல் நம்பருக்கு எனது உறவு முறையான முருகேசன் மகன் வெற்றிவேல் என்பவர் நம்பரில் தொடர்பு கொண்டு உடனடியாக தன்னை பார்க்க வருமாறு அழைத்துள்ளார். இந்த விபரத்தை என்னிடம் தகவல் தெரிவித்து விட்டு அவனுடைய இரண்டு சக்கர வாகனத்தை எடுத்து சென்றான்.
அதன் பின்னர் எனது மகன் வெற்றிவேல் மற்றும் கொற்கை, மாரமங்கலத்தை சார்ந்த கணபதி மகன் காசி என்ற காசி பண்ணையார் மற்றும் அகரத்தை சார்ந்த வேல்க்கண் மகன் செல்வக்குமார் ஆகிய மூன்று பேரையும் சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகில் உள்ள பனைமரக் கூட்டத்தின் அருகில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தாக சொல்லக் கூடிய இடத்தில் அதிகப்படியான இரத்தம் சிதறி காய்ந்து கிடக்கும் நிலையை காண முடிகின்றது.
மேலும் நான்கு பேர்களும் ஒருவருக்கொருவரை சந்தித்து கொற்கை பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக அன்று இரவு அந்த வழியாக சென்றது கொற்கை பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவால் பதிவாகியுள்ளது. எனது மகன் முத்துக்கண்னுக்கும் மேற்படி காசி என்ற காசி பண்ணையார் என்பவருக்கும் கார் வாங்கியது சம்பந்தமாகவும், வாழை தோட்டம் குத்தகை சம்பந்தமாகவும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த 6 மாதத்திற்கு காசி எனது வீட்டிற்கு வந்து என்னிடம் உனது மகன் முத்துக்கண்னுவை ஒழுங்காக இருக்கச் சொல் மீறி என்னிடம் தகராறு செய்தால் நடப்பது வேறு என மிரட்டல் விடுத்து சென்றார்.
மேற்படி சூழ்நிலைகளை வைத்து பார்க்கும் போது எனது மகன் முத்துக்கண்னுவை வெற்றிவேல், காசி என்ற காசிப்பண்ணையார் மற்றும் செல்வக்குமார் ஆகிய மூன்று நபர்களும் கூட்டாக சேர்ந்து நயவஞ்சகத்தோடு கூட்டு சதி செய்து எனது மகனை கொலை செய்ய வேண்டும். கொலை குற்றத்தில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தோடு தடையங்களை அழித்து விபத்தில் இறந்து விட்டதாக சம்பவத்தை மறைத்து வழக்கினை திசை திருப்பியுள்ளார்கள்.
மேற்படி சம்பவம் நடந்த நாளில் மகனின் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் விபரத்தினை அறிந்து கொள்ள முடியும் இல்லாத பட்சத்தில் உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடுவார்கள். எனவே எனது மகன் முத்துக்கண் மாம மரணம் குறித்து தகுதியான காவல் அதிகாரியை நியமித்து சரியான முறையில் புலன் விசாரணை மேற்கொண்டும், எனது மகன் முத்துக்கண் கொலையில் ஈடுபட்டுள்ள உண்மை குற்றவாளிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


