இன்றைய தினமணி நூல் அரங்கத்தில் நான் எழுதிய பொருநை ஆதிச்சநல்லூர் (அறிக்கைகளும் அருங்காட்சியகங்களும்) என்ற நூல் விமர்சனம் வெளிவந்துள்ளது. வெளியிட்ட தினமணி ஆசிரியர் குழுவிற்கு நன்றி. விமர்சனத்தினை படியுங்கள். நூல் வேண்டுவோர் 8760970002 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் உங்கள் விலாசத்தினை அனுப்புங்கள். உங்கள் இல்லம் தேடி நூல் வந்து சேரும். அந்த சமயத்தில் நீங்கள் பணத்தினை கட்டி நூலைப் பெற்றுக்கொள்ளலாம். ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. -எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
பொருநை – ஆதிச்சநல்லூர் (அறிக்கை களும், அருங்காட்சியகங்களும்)- முத்தாலங் குறிச்சி காமராசு, பக்.383; ரூ.375, பொன் சொர்ணா பதிப்பகம், தூத்துக்குடி- 628809; 87609 70002.
ஆதிச்சநல்லூரின் தாழிகளை, இருக்கும் இடத்தி லேயே பார்த்து மகிழவும், வரவிருக்கும் மத்திய அகழாய்வுத் துறை அருங்காட்சியகத் தின் விளக்கங்களையும், திரு நெல்வேலியில் அமைக்கப்ப டவுள்ள மாநில அகழாய்வுத் துறை அருங்காட்சியகம் குறித் தும் நூல் எடுத்துரைக்கிறது.
நூலுக்கு மெருகேற்ற பல்வேறு காலங்களில் ஆதிச்சநல்லூர் குறித்து வெளியிடப்பட்ட ஆங் கிலம், தமிழ் அறிக்கையின் முழு வடிவங்களை ‘க்யூ ஆர்’ கோடு மூலம் பார்க்கும் வசதி உள்ளது. இதில் முனைவர் சத்தியபாமாவின் அறிக்கையும் (2004), அதே ஆண்டில் அகழாய்வு செய்த முனை வர் சத்தியமூர்த்தி மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒப் படைத்த முன்னோடி அறிக்கையும் அடங்கும். முற்கால ஆய்வாளர்களின் ஆங்கில அறிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆதிச்சநல்லூர் வாழ்விடங்களைத் தேடிய ஆய்வு, கொற்கை, மருதூர் அணைப்பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள வழக்கு, 2008 இல் வெளியான ஆதிச்சநல்லூர் கட்டுரையில் உள்ள ஆச்சரியங்கள், முதல்வர் அறிவித்த தன் பொருநை நாகரிகம், கொற்கையில் நான்கு. அடுக்கு கொண்டு திரவப் பொருள்கள் வடிகட் டும் சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு, பொருநை ஆற்றங்கரை குறித்த அறிக்கைகள் என பொரு ளடக்கத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயங்க ளையும் வாசிக்கும்போது வரலாற்று நிகழ்வுகள் ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர முடிகிறது. தொல் லியல் துறையின் நடப்பு நிகழ்வுகளைக் காட்டும் நூலாக உள்ளது.


