சாத்தான்குளத்தில் தொழிலதிபரை மிரட்டியதாக ஆலய அசன கமிட்டி நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பழைய வேதக் கோயில் தெருவைச் சோ்ந்த தனராஜ் மகன் தேவராஜ் ஜூட்ஜாா்ஜ் (35). தொழிலதிபரான இவா், கேன் தண்ணீா் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரிடம் சாத்தான்குளம் சிஎஸ்ஐ தேவாலய அசன கமிட்டி உறுப்பினா் குணசீலன் தங்கத்துரை (55), அசன விழாவுக்கு தண்ணீா் கேட்டதாகவும், தேவராஜ் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட தகராறில் குணசீலன் தங்கத்துரை அவதூறாகப் பேசி அரிவாளை காட்டி மிரட்டினாராம். இதுகுறித்து தேவராஜ் ஜூட் ஜாா்ஜ் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் ஜாண்சன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.


