ராஜகோகிலா அறக்கட்டளையின் தென்குமரி தமிழ்ச் சங்கத்தின் மாதந்திர கூட்டம் நாகர்கோயில் கோட்டார் ராஜகோகிலா தமிழ் அரங்கத்தில் வைத்து நடந்தது. தென்குமரி தமிழ்ச் சங்கம் துணை தலைவர் அனுசியா செல்வி வரவேற்றார். தென்குமரி தமிழ்ச்சங்கத் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். நாகர்கோவில் மாநகராட்சி கிழக்கு மண்டலம் தலைவர் அகஸ்டீனா கோகிலவாணி சதாசிவன் முன்னிலை வகித்தார். தென்குமரி தமிழச்சங்கம் செயலாளர் வழக்கறிஞர் இரா .கோபாலகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினார். அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வர் முனைவர் சுப்பிரமணியபிள்ளை வாழ்த்துரை வழங்கினார். பொருநை நகாரீகத்தின் பெருமை என்ற தலைப்பில் எழுத்தாளர் தமிழ்ச்செம்மல் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்புரையாற்றினார். மங்காவிளை ராஜேந்திரன், எழுத்தாளர் சரலூர் ஜெகன், முதற்சங்கு ஆசிரியர் சதீஷ், மக்கள் முரசு ஆசிரியர் இனியன் தம்பி உள்பட பலர் கலந்துகொண்டனர். பத்திரிக்கையாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.


