தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 5 மற்றும் 6ம் தேதிகளில் தூத்துக்குடி – சென்னை தாம்பரம் இடையே கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
தாம்பரம் – தூத்துக்குடி சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (வண்டி எண் 06001) தாம்பரத்தில் இருந்து ஆகஸ்ட் 05ம் தேதி சனிக்கிழமை இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடி – தாம்பரம் சிறப்பு ரயில் தூத்துக்குடியில் இருந்து ஆகஸ்ட் 6ம் தேதி (வண்டி எண் 06002) இரவு 9.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் திங்கள் கிழமை காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடி வந்தடைகிறது. இந்த ரயில்கள் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பனிமயமாதா திருவிழாவிற்கு ஏற்கனவே ஆகஸ்ட் 3, 4 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது கூடுதலாக ஆகஸ்ட் 5 மற்றும் 6ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் நலச்சங்கம் இந்த சிறப்பு ரயில்களுக்கான கோரிக்கையை தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பி வைத்திருந்தது. கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்மநாயகம் நன்றி தெரிவித்துள்ளார்.


