திருப்புரந்தீஸ்வரர் யூ டியூப் சேனல் மூலமாக தருவை வாழ வல்லப பாண்டீஸ்வர் ஆலய வரலாறை அறிய முடிந்தது. இந்த யூ டியூப் லிங்கை எனக்கு பிச்சுமணி அய்யாத்தான் கொடுத்து உதவினார். இரண்டு பாகமாக இந்த சேனலில் தருவை வாழ வல்லப பாண்டீஸ்வர் ஆலய வரலாறு பிரசுரிக்கப் பட்டிருந்தது. வீடியோவில் கோயில் அர்ச்சகர், பிச்சி மணி மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் சிவ அடிமை களிடம் பேட்டிகள் இடம் பெற்று இருந்தன. இந்த வீடியேவை முழுவதும் பார்த்தால் நமக்கு கோயில் வரலாறு தெள்ளத் தெளிவாக தெரிந்தது.
திருநெல்வேலி மாவட்டம் தருவை – அன்னை ஸ்ரீ அகிலாண் டேஸ்வரி சமேத அருள்மிகு ஸ்ரீ வாழவல்லப பாண்டீஸ்வரர் திருக்கோவிலில் மிகவும் விசேசமான வரலாற்றை கொண்டது.
சுவாமியின் பெயர் – அருள்மிகு ஸ்ரீ வாழவல்லப பாண்டீஸ்வரர். அம்பாள் பெயர் – அகிலாண்டேஸ்வரி அம்பாள். தீர்த்தம் அக்னி தீர்த்தம் .
தல விருட்சம் – இலந்தை மரம். புராண பெயர் – கூபராயநல்லூர். தற்போது விளங்கும் பெயர் – தருவை.
அர்ச்சகர்கூறும் போது, இந்த கோயில் – 1350 ஆண்டு களுக்கு முன்னாள் வாழ வல்ல பாண்டிய மன்னர்களால் அமையப்பெற்றது என்கிறார். மேலும் அவர் கூறும்போது இவ் ஊரில் இரண்டு சிவன் ஆலயங்கள் உள்ளது. இன் னொரு சிவன் ஆலயத்தின் பெயர் ஆவுடை அம்பிகை சமேத ஈஸ்வர மூர்த்தி என்பதாகும். எல்லா ஊரிலும் ஒரு சிவ ஆலயம் தான் காணப்படுவது வழக்கம். தருவை கிராமத்திலே இரண்டு சிவன் ஆலயம் அமையப்பெற்று இருப்பது மிகச் சிறப்பு. இங்கு அக்ரகாரத்திலே, மூதேவி ஸ்ரீதேவி சமேத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சிவா லயமும் பெருமாள் ஆலயமும், கிழக்கு பார்த்து அமைந்திருப்பது மிகச்சிறப்பு. இங்குள்ள வாழவல்ல பாண்டீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால், மூலஸ் தானத்தில் இருக்கக்கூடிய சிவ பெருமான் பெரிய லிங்கமாக உள்ளார். அம்பாள் அகிலாண் டேஸ்வரி, நெல்லை காந்திமதி அம்பாள் கோயிலில் எப்படி இருப்பாளோ அதே மாதிரி, பெரிய சிலையாக, அருள் பாலித்து கொண்டு இருக்கிறாள்.
இங்கு 1984இல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு 2010ல் கும்பா பிஷேகம் நடந்திருக்கிறது. தற்போது கும்பா பிஷேகத்திற்கு திருப்பணி நடந்து வருகிறது. விரைவில் கும்பாபிசேகம் நடைபெறும் என பக்தர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த கோயில் மூன்று ஏக்கரில் அமையப்பட்டுள்ளது. இந்த கோயிலில் பிரம்ம உற்சவம் கிடையாது. சிவராத்திரி மிக சிறப்பாக நடைபெறும். அதுபோல் நவராத்திரி, ஆடிப்பூரம், வளைகாப்பு சீமந்தம் போன்ற விழாக்கள் வெகு சிறப்பாக நடை பெற்று வருகிறது. ஐப்பசி மாசத்தில் வரக்கூடிய கந்த சஷ்டி திருவிழா ஆறு நாள் யாகசாலை பூஜை நடந்து அதன் பின் சூரசம் காரம் நடைபெறும். தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் மிக சிறப்பாக நடைபெறும்.
ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி, சஷ்டி, கிருத்திகை, சங்கடகர சதுர்த்தி, பிரதோஷம் போன்ற திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். மாத பிறப்பு அன்று கணபதி ஹோமம் நடைபெற்று, விநாயக பெருமான் அபிஷேகமாகி, உள்புறப்பாடு நடந்து, தீபாராதனை மற்றும் மகா பிரசாதம் வழங்கப்படும். மாதாமாதம் மாத பிறப்பு அன்று இக்கோயிலில் சிறப்பாக பூஜை நடைபெறுகிறது. ஐப்பசியில் அம்மையப்பனுக்கு திருக்கல்யாணம், நூறு வருடங் களுக்கு பிறகு நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.
இந்த கோயில் தல வரலாறு பற்றி அந்த வீடியோவில் கூறியிருப் பதாவது.
வாழவல்ல பாண்டீஸ்வரர் திருக் கோவில் வல்லப பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. பாளையங்கோட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த குறுநில மன்னர் களால் இத்திருக் கோவில் கட்டப் பட்டது. ஒருநாள் மன்னர் தனது தளபதியை கூப்பிட்டார். “தளபதியே கூப்பகராய நல்லூரில் நீ போய் ஒரு சிவாலயம் கட்டி முடித்து விட்டு, என்னிடம் வந்து சொல்லு. நான் வந்து சிவனுக்கு கும்பாபிஷேகம் செய்து வைக்கிறேன்” என்று மன்னர் கட்டளை யிட்டார். “சரி மன்னா” என்று கூறிய தளபதி, இந்த ஊருக்கு வந்து சிவாலயம் கட்டினார்.
அதை கட்டி முடித்த பின் கும்பாபிஷேகத்திற்காக மன்னனிடம் போய் தகவல் கூறினான். “மன்னா நீங்கள் கூறியபடியே கோவில் கட்டி விட்டோம். நீங்கள் தான் வந்து கும்பாபிஷேகம் பண்ண வேண்டும்” என்று கூறினார். “சரி வருகிறேன்” என்று மன்னர் பதிலளித்தார். ஒருநாள் தளபதி கட்டிய கோவிலை மன்னன் நேரில் சென்று பார்த்தார்.
அந்த கோயில் மன்னர் மனதுக்கு திருப்தியாக இல்லை. எனவே தளபதியிடம், “தளபதியாரே அரண்மனைக்கு வாரும் உம்மிடம் பேச வேண்டும்” என்று கூறினார். தளபதி மன்னர் ஏன் கூப்பிடுகிறார் என்ற கேள்விக்குறியுடன் அரண் மனைக்கு சென்றார். “ தளபதியாரே நீர் கட்டிய சிவாலயம் எனக்கு திருப்தியாக வில்லை. எனவே இன்னொரு சிவாலயம் கட்ட வேண்டும். கோயில் கட்டிட வேலையை நானே நேரில் வந்து பார்வையிடுகிறேன்”. என்றார்.
அதன் பின் மன்னரே நேரில் வந்து தற்போது உள்ள பெரிய சிவாலயத் தை கட்டினார். தளபதியார் கட்டிய கோவில் முகப்பிலிருந்து கருவறை வரை யாராக இருந்தாலும் குனிந்து தான் செல்லவேண்டும் அது மிகச் சிறிய கோவிலாக இருந்தது. எனவே மன்னர் எடுத்து கட்டிய கோவிலே தற்போது உள்ள மிகப்பெரிய கோவிலாக விளங்குகிறது.
இந்த கோயிலை பொறுத்தவரை மிகப் பெரிய லிங்கத்தினை பிரதிட்சை செய்துள்ளார் மன்னர். அந்த லிங்கத்தினை முதலில் பிரதிட்சை செய்து விட்டுத்த கோயில் மூலஸ்தானத்தினை கட்டியுள்ளார்.
அதற்கு காரணமும் உண்டு. அரசன் தனக்கு பிற்காலத்தில் யாராவது வந்து கும்பாபிசேகம் செய்தால், தான் வைத்த மூலவரை மாற்றவோ, அகற்றவோ கூடாது என்பதற்காக அப்படி செய்தான் என ஆன்மிக அன்பர்கள் கூறுகிறார்கள்.
சுவாமியை போலவே, அம்பாளையையும் பிரதிட்சை செய்தான். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக தருவையில் அம்பாள் சன்னதி அமைந்துள்ளது. நடராஜர் நடனம் ஆடின சபை ஐந்து . இதை பஞ்சபூத சபை என்பார்கள். நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என இந்த ஸ்தலங்களை பிரிப்பார்கள். நடராஜர் படிக மேனி ஐந்தையும் ஒரே இடத்தில் உருவாக்க வேண்டும் என்று ஸ்தபதி ஒருவரிடம் மன்னர் கோரிக்கை வைத்தார். அதே வேளையில் ஐந்து நடரா-ஜர் தலங்களிலும் சென்று தரிசித்த புண்ணியம் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டுமென இங்குள்ள நடராஜரை அந்த ஸ்தபதி உருவாக்கி கொடுத்தார் என்பர். எனவேதான் இங்கு உள்ள நடராஜருக்கு எந்தப் பிடித்தரமும் இல்லாமல் தனது ஒரு கால் பிடிதாரத்தில் நிற்கிறார். என்கிறார்கள் பக்தர்கள்.
மன்னர் சிவன் மேலுள்ள பேரன்பினால் தனது திருநாமத்தையே சாமிக்கு வைத்து விடுவோம் என்று, வாழவல்லவ பாண்டீஸ்வரர் என மன்னரின் பெயரே சிவனின் திருநாமாக வைத்து மக்கள் வணங்கி வருகிறார்கள். தன் பெயரை வைத்தார். கோவிலின் சிறப்பு சன்னதிகள் பல உள்ளன.
அவை யாவை?
(நதி வற்றாமல் ஓடும்)