
இதுவரை..
குவைத் செல்வதற்கு டாக்டர் சுதாகர் மூலமாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கியவர்கள் குவைத் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கத்தினர். இந்த பயணத்தினை பற்றி எழுதி வருகிறேன். தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து துவங்கி சென்னை விமான நிலையம் வந்து தற்போது குவைத் விமான நிலையத்தில் இறங்கியுள்ளோம். எங்களை தமிழ்நாடு குவைத் பொறியாளர்சங்க செயலாளர் அசோக் குமார் அய்யா தங்கும் இடத்துக்கு அழைத்துச்சென்றார். – முத்தாலங்குறிச்சி காமராசு.
இனி.
பாலசுப்பிரமணியன் அய்யா தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர். இவர் தமிழ்நாடு குவைத் பொறியாளர் சங்கத்தில் துணைத்தலைவராக தற்போது பணியாற்றி வருகிறார். இவர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்தவர். இவர் கடந்த 2019 மற்றும் 2022 ல் பொருளாளராக இருந்து வருகிறார். குவைத் அரசு நடத்தும் எண்ணெய் கம்பேனியில் இவர் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
அசோக்குமார் அய்யா திருச்சியை சேர்ந்தவர். இவர் சங்க பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரைபொறுத்தவரை கடந்த 20 வருட காலமாக குவைத்தில் உள்ள அரசு எண்ணெய் கிணற்றில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரும் 2019ல் தமிழ்நாடு குவைத் பொறியாளர் சங்கத்தில் பொதுச்செயலளாராக பணியாற்றி வருகிறார்.
எங்களை இன்முகத்துடன் வரவேற்று நாங்கள் தங்கும் விடுதிக்கு அழைத்துச்செல்கிறார் அசோக்குமார் அய்யா. கிட்டத்தட்ட குவைத் சிறிய நாடு தான். ஒரு எல்லையில் இருந்து மறு எல்லைக்கு காரில் செல்ல வேண்டும் என்றால் போக்குவரத்து தடை இல்லையென்றால் 25 நிமிடத்தில் சென்று விடலாமாம்.
எங்கெங்கும் எண்ணெய் கிணறு எண்ணெய் சம்பந்தப்பட்ட ஆலைகள், அலுவலங்கள் நிறைந்து காணப்படுகிறது. எங்களைஅழைத்துக்கொண்டு கார் கிளம்பியது. இடது புறம் தான் டிரைவிங் சீட்.
நான் முதல் முதலாக இங்குதான் இந்த அமைப்பை பார்க்கிறேன். உலகத்தில் இரண்டு வகையான டிரைவிங் அமைப்புகள் உள்ளன.
அசோக் குமார் அய்யா எங்களிடம் நிறைய பேசினார். அதுபோலவே சங்கத்தின் பொருளாளர் சுப்பிரமணியன் அய்யாவும் குவைத் பற்றி நம்மிடம் பேசியிருந்தார்கள். கூகுள் வழியாகயாவும் குவைத் பற்றி நான் தெரிந்து வைத்ததை காரில் வரும்போதே அசைப்போட ஆரம்பித்தேன்.
எங்கள் வண்ண கலரில் வாகனங்கள் வரிசை கட்டிச்செல்ல, இருபுறமும் வண்ணத்தில் சாலைகள் மின்ன எங்களை அழைத்துக்கொண்டு கார் கிளம்பியது. நாங்கள் தங்க வேண்டிய இடத்தின் பெணர் அபு கலிபா.
அபு கலிபா, மும்பையில் தாராவி போன்றது. தாராவி எப்படி தமிழர்களின் புகழிடமோ அதுபோலவே குவைத்தில் அபு கலிபா தமிழர்களின் புகழிடம். ஆனால் ஆசியாவிலேயே மிகப்பெரிய சேரி தாராவி. ஆனால் குவைத்தில் அபு கலிபா அப்படியல்ல. மிகவும் பணக்காரர்கள் வாழும் இடம். மிகப்பெரிய தொழில் அதிபர்கள், தொழில் வல்லுனர்கள் வசிக்கும் இடம். இங்குத்தான் நமது பலவேசமுத்து அய்யாவும், அசோக்குமார் அய்யாவும், சுப்பிரமணியன் அய்யாவும் வசித்து வருகிறார்கள்.
அதற்கு காரணமும் உண்டு. அரபி கடலோரத்தில் உள்ள அபு கலிபா, அருகிலேயே எண்ணெய் கிணறு, மற்றும் எண்ணெய் ஏற்று மதி அலுவலகம் உள்பட முக்கிய இடங்கள் உள்ளது. நாட்டின் எந்த பகுதிக்கும் நாம் இங்கிருந்து மிக வேகமாக செல்ல இயலும். அனைத்து சாலைகளையும் இணைக்கும் மிக முக்கியமான இடமாகும்.
குவைத் நாடு தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். பாரசீக வளைகுடாவின் வடமுனையில் அமைந்துள்ள குவைத் நாட்டின் தெற்கே சவூதி அரேபியாவும், வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் எல்லை நாடுகளாக உள்ளன.மொத்தப் பரப்பளவு 17,818 கி.மீ2 (6,880 சதுர மைல்) ஈராக்குக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே அமைந்துள்ள சிறிய நாடாகும். இதன் தலைநகரம் தலைநகரம் குவைத் சிட்டி. 2013ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை 4 மில்லியன் ஆகும். ஆட்சி மொழி அரபு ஆகும்.
இங்கு வசிக்கும் மக்கள் குவைத்தி என அழைக்கப்படுகின்றனர். நாட்டில் 85% மக்கள் முஸ்லிம் மதத்தை பின்பற்றுகின்றனர். இவர்களுள் 70% மக்கள் சன்னி பிரிவையும், 30% மக்கள் ஷியா பிரிவையும் சார்ந்தவர்கள். 84% சதவீத மக்கள் கல்வியறிவு பெற்றவராக உள்ளனர். மக்கள் தொகையில் உலகின் 140ஆவது நாடு. அரபு மொழியோடு ஆங்கிலமும், பிரெஞ்சு மொழியும் கல்விக் கூடங்களில் கற்பிக்கப்படுகிறது. சில இடங்களில் தமிழ் கற்றுக்கொடுக்கப் படுகிறது.
குவைத் நாட்டின் நாணயம் குவைத் தினார். குவைத் தினார் உலகின் அதிக மதிப்புடைய நாணய அலகாக உள்ளது. கல்ஃப் ரூபாய்க்கு மாற்றாக 1961இல் தினார் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. குவைத் நாட்டின் பொருளாதாரம் பெட்ரோலியத்தை நம்பியே உள்ளது. பெட்ரோலியம் நாட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பொருளாகும். தனிநபர் வருமானத்தில் உலகின் நான்காவது வளமான நாடு. உலகக் கச்சா எண்ணெய் வளத்தில் 10% குவைத் நாடு கொண்டுள்ளது. 1937இல் குவைத்தில் மிகுந்த எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், அபரிமிதமான எண்ணெய் வளத்துடன் வளர்ச்சி அடையத் தொடங்கியது.
குவைத் நாட்டின் வரலாறு 18ஆம் நூற்றாண்டில் இருந்துதான் தொடங்குகிறது. அரேபியர்கள் அந்தக் காலக்கட்டத்தில்தான் குவைத் பகுதிக்குள் நுழைந்து குடியேறத் தொடங்கினர். ஈராக்குக்குக் சொந்தமான எண்ணெய்க் கிணறுகளில் குவைத் எண்ணெய் திருடி விற்பதாகக் குற்றம் சாட்டி போரில் ஈடுபட்டு ஈராக், குவைத் நாட்டை 1990இல் ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக்கொண்டது. 1991இல் அமெரிக்கா மற்றும் அய்.நா. தலையீட்டால் ஈராக் குவைத்தை விட்டு வெளியேறியது. வெளியேறுகையில் குவைத்தில் மொத்தம் உள்ள 1080 எண்ணெய் கிணறுகளுக்குத் தீ வைத்துவிட்டுச் சென்றது.
1990&91 ஆண்டுகளில் சேதமடைந்த எண்ணெய் உள் கட்டமைப்புகளை சரிசெய்ய குவைத் 5 பில்லியனுக்கு மேற்பட்ட தொகையை செலவு செய்தது.
இங்கு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி நடைபெறுகிறது. குவைத் அய்க்கிய இராச்சியம் (பிரிட்டனிடமிருந்து) ஜூன் 19, 1961 இல் விடுதலை அடைந்தது. குவைத் நாட்டில் அரசரைத் தொடர்ந்து அமீர் மற்றும் பிரதமர் அதிகாரம் மிக்கவர்களாக கருதப்படுகிறார்கள். குவைத் நாட்டின் தேசிய பறவை சாகர் ஃபால்கான், தேசிய விலங்கு ஒட்டகம், தேசிய மலர் அர்பாஜ் , தேசியக் கனி பேரிச்சை. தேசிய விளையாட்டு கால்பந்து. தேசிய மரம் ராயல் பாலம்.
மற்ற சில அரபு நாடுகளைப் போலில்லாமல் இந்நாட்டில் பெண்கள் கார் ஓட்டலாம். வேலைக்குச் செல்லலாம். இங்கு பெட்ரோல் விலையைவிட தண்ணீர் விலை அதிகம். எண்ணெய் வளம் கண்டறியப்படுவதற்கு முன்பு உலகின் ஏழை நாடாகவே குவைத் இருந்தது. குவைத்தில் மற்ற வெளிநாட்டவர்களைவிட இந்தியர்களே அதிகம் உள்ளனர். குவைத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் குவைத்தில் வசிப்பவர்கள் ஆவர். இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்தே பல்வேறு தொழில் வாய்ப்புகள் காரணமாக தமிழர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். குவைத்தின் மிகப் பிரபலமான உணவு “மீன்கறி”. உலகின் 5ஆவது எண்ணெய் வளமிக்க நாடு. முத்துக்குளித்தல், மீன்பிடி தொழில் இங்கு அதிகமாக நடைபெறுகிறது. வளைகுடா நாடுகளில் அதிக அளவு தொலைக்காட்சி நாடகம், நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் திரைப்படங்கள் தயாரிப்பது குவைத்திலேயே அதிகம் நடக்கிறது. குவைத்தில் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி விளையாட்டுகள் விரும்பி விளையாடப்படுகிறது.
குவைத் 6 கவர்னர்கள் ஆளும் நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெருமளவு பாலைவனங்களே சூழ்ந்த நாடு. குவைத்தில் நிரந்தரமான ஆறுகள் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரையே குடிநீராக பயன்படுத்தும் நாடு. அரேபிய நாடுகளில் ஒன்றான குவைத் கல்வித் தரத்தில் வளர்ச்சி அடைந்த நாடு. நவீனமயமாக்கப்பட்ட தேசிய நெடுஞ் சாலைகளைக் கொண்ட நாடு. பெரும்பாலான மக்கள் பேருந்துப் போக்குவரத்தையே விரும்புகின்றனர். குவைத்தில் நாம் ஏற்கனவே கூறியபடி ராணுவ விமான நிலையம் உள்பட 3 விமான நிலையங்கள் உள்ளன. பரபரப்பான பல துறைமுகங்களும் உள்ளன.குவைத்தில் உள்ள டவர்களில் முருகாய் டவர் மிக உயரமானது. இதன் உயரம் 372 மீட்டர். இந்த டவரிலிருந்து பார்த்தால் குவைத் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளைப் பார்க்க முடியும்.
பைலக்கா என்ற தீவு மிகவும் பிரபலமானது. ஒரு காலத்தில் மக்கள் வசித்த தீவு. இப்போது மக்கள் வசிக்கவில்லை. போரில் பாதிப்படைந்த கட்டிடங்களே எஞ்சி நிற்கின்றன. ‘தி அவென்யூ மால்’ அங்காடித் தெரு: இது மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகப்பெரிய அங்காடித் தெருவாகும். இந்த ‘தி அவென்யூ மால்’ 800 கடைகளைக் கொண்டது. இங்குள்ள ஹவுஸ் ஆப் மிரர்: முழுவதும் கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்ட வீடு.
இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலம்: குவைத் சிட்டியில் அமைந்துள்ள மாபெரும் மசூதி. இது 4 இலட்சத்து 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்தது. இந்த மசூதியில் ஒரே சமயத்தில் 5 ஆயிரம் பேர் தொழுகை செய்ய முடியும்.
குவைத் மாநிலத்தை மையமாகக் கொண்ட குவைத் நகரம், அரேபிய தீபகற்பத்தின் உட்பகுதியில் உள்ள அனிசா பழங்குடியினரின் குடும்பங்களின் குழுவான பானு (பனி) உதுப், 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதிக்கு குடிபெயர்ந்தபோது உருவானது. . குவைத்தின் தன்னாட்சி ஷேக்மத்தின் அடித்தளம் 1756 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது, குடியேற்றவாசிகள் ஒரு ஷேக்கை நியமிக்க முடிவு செய்தனர் . 19 ஆம் நூற்றாண்டில் குவைத் ஒரு சுதந்திரமான வர்த்தக சமூகமாக வளர்ந்தது . நூற்றாண்டின் இறுதியில், குவைத்தை ஒட்டோமான் பேரரசுக்கு நெருக்கமாக நகர்த்தத் தொடங்கினார். இருப்பினும் அவர் தனது நாட்டை ஒட்டோமான் ஆட்சியின் கீழ் வைக்கவில்லை. குவைத்தில் வழக்கத்திற்கு மாறான அரசியல் வன்முறைச் செயலான அவரது சகோதரர் அப்துல்லாவை படுகொலை செய்து ஆட்சிக்கு வந்த முபாரக் தி கிரேட் பதவிக்கு வந்தவுடன் அந்த போக்கு தலைகீழாக மாறியது. குவைத்தை இணைப்பதற்கான ஒட்டோமான் அச்சுறுத்தல்கள் பிரிட்டனுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொள்ள முபாரக்கைத் தூண்டியது. 1899 ஒப்பந்தம் அடிப்படையில் குவைத்தின் வெளியுறவு விவகாரங்களில் பிரிட்டனுக்குக் கட்டுப்பாட்டை வழங்கியது. முதலாம் உலகப் போர் (1914-&18) வெடித்ததைத் தொடர்ந்து , குவைத் பிரிட்டிஷ் பாதுகாவலராக மாறியது.
1922 அல்-உகைர் மாநாட்டில், பிரிட்டன் குவைத்- சவூதி எல்லையில் பேச்சுவார்த்தை நடத்தியது, இதன் விளைவாக குவைத்திற்கு கணிசமான பிராந்திய இழப்பு ஏற்பட்டது. 1923 இல் ஒரு குறிப்பாணை, 1913 இல் அங்கீகரிக்கப்படாத மாநாட்டின் அடிப்படையில் ஈராக்குடனான எல்லையை அமைத்தது.
குவைத் மீதான முதல் ஈராக்கிய உரிமை கோரல் 1938 இல் தோன்றியது- எமிரேட்டில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு. ஈராக் அல்லது ஒட்டோமான் பேரரசு உண்மையில் குவைத்தை ஆட்சி செய்யவில்லை என்றாலும், ஈராக் ஒரு தெளிவற்ற வரலாற்றுப் பட்டத்தை வலியுறுத்தியது. அந்த ஆண்டு அது அமீருக்கு எதிரான வணிகர்களின் எழுச்சிக்கு சில சொல்லாட்சி ஆதரவையும் வழங்கியது . மஜ்லிஸ் இயக்கம் என்று அழைக்கப்படும் எழுச்சியின் தோல்வியைத் தொடர்ந்து, ஈராக் குவைத்தின் குறைந்தபட்சம் ஒரு பகுதிக்கு, குறிப்பாக மூலோபாய தீவுகளான புபியான் மற்றும் அல்-வர்பாவுக்கு உரிமை கோரியது.
ஜூன் 19, 1961 இல், பிரிட்டன் குவைத்தின் சுதந்திரத்தை அங்கீகரித்தது. இருப்பினும், ஆறு நாட்களுக்குப் பிறகு, ஈராக் அதன் உரிமைகோரலைப் புதுப்பித்தது, அது இப்போது முதலில் பிரிட்டிஷ் மற்றும் பின்னர் அரபு லீக் படைகளால் நிராகரிக்கப்பட்டது . அக்டோபர் 1963 வரை, ஒரு புதிய ஈராக் ஆட்சி குவைத்தின் சுதந்திரம் மற்றும் அதன் பின்னர் அதன் எல்லைகள் இரண்டையும் முறையாக அங்கீகரித்தது, அதே நேரத்தில் தீவுகளை அணுகுவதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது.
1980-&88 ஈரான் -ஈராக் போர் குவைத்தின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருந்தது. குவைத், பிராந்தியத்தில் ஈரானிய மேலாதிக்கத்திற்கு பயந்து, ஈராக்கிற்கு கணிசமான நிதி உதவியை வழங்குவதற்கும் , இராணுவ விநியோகங்களுக்கு ஒரு முக்கிய வழித்தடமாக சேவை செய்வதற்கும் எந்த மாற்றையும் காணவில்லை. ஈரான் 1981 இல் குவைத் சுத்திகரிப்பு வளாகத்தைத் தாக்கியது, இது 1983 மற்றும் 1986 இல் அடுத்தடுத்த நாசவேலைகளுக்கு உத்வேகம் அளித்தது. 1985 இல் ஈரானிய சார்பு ஈராக் தீவிரவாதக் குழுவான அல்-தாவாவின் உறுப்பினர் குவைத் ஆட்சியாளரான ஷீயால்-அஹ்மத்-ஐ படுகொலை செய்ய முயன்றார்.
1986 செப்டம்பரில் ஈரான் வளைகுடா கப்பல்கள் மீது தாக்குதல்களை குவிக்கத் தொடங்கியது. பெரும்பாலும் குவைத் டேங்கர்கள் மீது தாக்கினர். இது 1987 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டையும் குவைத் தனது டேங்கர்களுக்கு பாதுகாப்பை வழங்க அழைக்க வழிவகுத்தது. போரின் ஒரு விளைவு குவைத்துக்கும் அதன் பழமைவாத வளைகுடாவிற்கும் இடையே நெருக்கமான உறவுகளை மேம்படுத்துவதாகும். அரபு அண்டை நாடுகளான சவூதி அரேபியா , பஹ்ரைன் , கத்தார் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகியவை பொருளாதார மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் நெருக்கமான ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக 1981 இல் குவைத் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலை (ஜிசிசி) உருவாக்கியது . 1988 இல் ஈரான்-ஈராக் போர் முடிவடைந்தவுடன், ஈராக்-குவைத் உறவுகள் மோசமடையத் தொடங்கின. ஆகஸ்ட் 2, 1990 இல், ஈராக் எதிர்பாராத விதமாக பாரசீக வளைகுடாப் போரைத் தூண்டி, நாட்டைக் கைப்பற்றியது .
பாரசீக வளைகுடாப் போர் , பாரசீக வளைகுடாப் போரின் போது ஈராக் படைகளால் தொடங்கப்பட்ட எண்ணெய் தீ, குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வடக்கே, ஏப்ரல் 1, 1991 அன்று எரிந்தது.
ஈராக் தனது நடவடிக்கைக்கு ஆதரவாக பல வாதங்களை முன்வைத்த போதிலும், குவைத்தின் மீதான படையெடுப்பின் பின்னணியில் இருந்த அடிப்படைக் காரணங்கள், முந்தைய ஈராக்கிய ஆட்சிகள் அதே முடிவைத் தேடுவதற்கு வழிவகுத்தது – குவைத்தின் எண்ணெய் மற்றும் செல்வத்தின் மீதான கட்டுப்பாடு, பாரசீக முகப்பில் இராணுவ நன்மை. வளைகுடா , மற்றும் ஈராக் தலைமையின் கீழ் பான்-அரேபியம் – அத்துடன் ஈரான்-ஈராக் போரில் தோல்வி யடைந்ததை அடுத்து ஈராக் மக்கள் ஆதரவை உருவாக்குவதற்கான ஒரு வழி. ஐக்கிய நாடுகள் சபை , முக்கிய உலக வல்லரசுகள், அரபு லீக் மற்றும் ஐரோப்பிய சமூகம் ஆகியவற்றின் கண்டனங்களை மீறி, ஆகஸ்ட் 8 அன்று ஈராக் குவைத்தை தன்னுடன் இணைத்துக் கொள்வதாக அறிவித்தது. ஈராக் படையெடுப்பிற்கு குவைத்களின் கடுமையான எதிர்ப்பு இருந்தது. சவூதி அரேபியாவில் குவைத் நாடுகடத்தப்பட்ட அரசாங்கத்தின் இராஜதந்திர முயற்சிகளுடன் இணைந்து, ஈராக் தனது ஆட்சியை கடுமையாக குவைத்தின் மீது திணிப்பதைத் தடுக்கவில்லை.
குவைத் வரலாற்றை அசைப்போட்டுக்கொண்டு இருக்கும் போதே நாங்கள் வந்த கார், ஏர்போர்டை விட்டு பிரதான சாலையில் வந்து ஏறியது. அதன் பின் அபு கலிபா நோக்கி வேகம் பிடித்தது.
(குவைத் பயணம் தொடரும்)