ரிலையன்ஸ் அறக்கட்டளை கன்னியாகுமரி மாவட்டத்தில் தகவல் சேவை என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் மீனவர்களுக்கு தேவையான தகவல்களை பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலமாக வழங்கி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்துகொண்டிருக்கிறது. மழை காலங்களில் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதால் விவசாயிகள் இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இதனை கருத்தில் கொண்டு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் கால்நடை நலம் மற்றும் நோய் மேலாண்மை குறித்து டயல் அவுட் கான்பிரன்ஸ் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கால்நடை மருத்துவக்கல்லூரி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், பறக்கையில் பணியாற்றும் தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர் ஜென்சிஸ் இனிகோ அவர்கள் கறவை மாடுகள், வெள்ளாடுகள்,மற்றும் கோழிகளுக்கு வரும் பருவகால நோய்கள் குறித்தும் அதிலிருந்து அவைகளை பாதுகாப்பது குறித்தும் விளக்கம் அளித்தார். மற்றும், மடிவீக்க நோயிலிருந்து கறவை மாடுகளை பாதுகாப்பது, உண்ணிகளை தவிர்த்தல், உணவு மேலாண்மை, தடுப்பு ஊசி போடுவதின் அவசியம் குறித்து விளக்கம் அளித்தார். இதில் கல்குளம் மற்றும் விளவன்கோடு தாலுகாவிலுள்ள சுமார் 40 கால்நடை விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் மற்றும் நுதானா டிரஸ்ட் ன் பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.


