ஆழ்வார்திருநகரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவு புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவு புதிய கட்டிடத் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு திட்ட இயக்குனர் கண்ணபிரான் தலைமை வகித்தார். இணை இயக்குனர் பொன்இசக்கி, பொற்செல்வம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செல்வி, பேரூராட்சி தலைவர் சாரதா பொன்னி இசக்கி ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்திபன் மருத்துவ அலுவலர் ரோகிணி கலந்து கொண்டனர். சித்த மருத்துவ அலுவலர் ஜன்னத் ஷெரீப், எஸ்தர் யூனிஸ், மருந்தாளுநர் தாரணி ஆகியோர் விழாவை ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செல்வகுமார், ரவிசந்திரன், ரவி செல்வம், முருகபொற்செல்வி, சேவியர், முத்தமிழ், ரமணி, ஜெகதீஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.