முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய புதிய நூல் தவழ்ந்து வரும் தாமிரபரணி – 500 பக்கம் விலை 500. தற்போதைய விலை 450 ரூபாய். இந்த நூலை பெற விரும்புவோர் 8760970002 என்ற எண்ணில் உள்ள வாட்ஸ் அப்-க்கு விலாசத்தினை அனுப்பினால் உங்களை தேடி இல்லத்திற்கே நூல் வந்து சேரும். பணத்தினை கட்டி நீங்கள் நூலை பெற்றுக்கொள்ளலாம். தபால் செலவு இலவசம்.
இந்த நூலை முனைவர் கந்தசுப்பு அவர்களிடம் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அறிமுகம் செய்கிறார்.
நூலை பற்றி
தாமிரபரணி நதி, மேற்குதொடர்ச்சி மலை, ஜமீன்தார்கள் வரலாறு, சித்தர்கள் வரலாறுகள் என முன்னணி தமிழ் பத்திரிக்கையில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதி வருகிறார். இதுவரை 55 நூல்களை எழுதியுள்ளார். இவரின் நவீன தாமிரபரணி மகாத்மியம் என்ற நூல் நதிகள் வரலாற்றில் முதல் முதலாக பார்கோடு மூலம் வீடியோ பார்க்கும் வசதி கொண்டது. ஆதிச்சநல்லூக்காக வழக்கு தொடர்ந்து உலக தமிழர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு நியூஸ் 7 தொலைக்காட்சி 2010-ஆம் ஆண்டு தமிழ ரத்னா சிறப்பு விருதை வழங்கியது. 2020-ம் ஆண்டின் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் பெற்றார். காஞ்சி மாடதிபதி, திருவாவடுதுறை ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் கரங்களால் விருது பெற்றவர். கடந்த 35 வருடங்களாக தாமிரபரணி தேடலில் உள்ள இவர், இந்த நூலில் தாமிரபரணி தோற்றம், இலக்கியம் உள்பட வரலாறுகள் மற்றும் கல்வெட்டுகளை பற்றி எழுதியுள்ளார். தாமிரபரணி அழிவு, தாமிரபரணி காப்பாற்றப்பட வேண்டிய அவசியம், தாமிரபரணியை காப்பாற்ற எடுக்கவேண்டிய நடவடிக்கை என அங்குலம் அங்குலமாக அலசியுள்ளார். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் பெயர் பட்டியல், தாமிரபரணி கரை கிராமங்களின் கல்வெட்டுகள், திருப்புடைமருதூர் மரச்சிற்பங்கள், கிருஷ்ணாபுரம் கலைச்சிற்பங்கள் உள்பட பல்வேறு சிறப்புகளை இந்த நூல் நமக்கு விளக்குகிறது. ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை அகழாய்வு குறித்தும் இந்த நூலில் பதிவு உள்ளது. இந்த நூலுக்கு பாண்டிச்கேரி அரசு செயலாளர் சுந்தரேசன் அவர்கள் அணிந்துரையும், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் வாழ்த்துரையும் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூலில் தாமிரபரணி நதி கடந்துவந்த பாதை குறித்து ஆசிரியர் எழுதியுள்ளார். தாமிரபரணியை நேசிக்கும் ஒவ்வொருவர் வீட்டிலும் பாதுகாக்கப்பட வேண்டிய நூல் இது


