ஸ்ரீவைகுண்டம் ஜேம்ஸ் மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளியில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஜேம்ஸ் மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு அடையாள அட்டை மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. இந்த முகாமை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தொடங்கி வைக்க வருகை தந்தார். அவருக்கு குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அருள் ஜெயராணி தலைமை வகித்தார். உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி, உதவி திட்ட அலுவலர் பெல்சியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் சங்கர், பேரூராட்சி கவுன்சிலர் வள்ளிமுத்து, காங்கிரஸ் வட்டாரத்தலைவர் நல்லக்கண்ணு, நகர பொறுப்பாளர் கருப்பசாமி, சித்திரை, சீனி ராஜேந்திரன், புகாரி, நிலமுடையான், பஞ்சவர்ணம், உஸ்மாயின், தங்கபாண்டி, முத்துகருப்பன், பாரதி, மதிசேகரன், சந்திரையா, பேச்சிராஜன், மகாராஜா, சொரிமுத்து, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


