தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
தென்பழனி என்று அழைக்கப்படும் குடவரைக் கோயிலான கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் 13ஆம் ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது . அதைத் தொடா்ந்து, திருப்பள்ளி எழுச்சி பூஜை, திருவனந்தல் பூஜை, விக்னேஷ்வர பூஜை, எஜமான அக்னீஸ்வர பூஜை, கும்ப பூஜை ஆகியவை நடைபெற்றன.
பின்னா் காலை 10.40க்கு மணிக்கு கழுகாசல மூா்த்தி, ஜம்புலிங்கேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோபுர விமானங்களுக்கு புனித நீா் ஊற்றி அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கழுகாசலமூா்த்தி, வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் கோயில் செயல் அலுவலா் காா்த்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.


