ஜூலை 7 அன்று தான் சர்வதேச சாக்லேட் தினம். மாயன் இன மக்கள் காலத்திலேயே சாக்லேட்டை கண்டுபிடித்து விட்டார்கள் என்று கூறப்பட்டாலும் 1550 ஜூலை 7 அன்று தான் ஐரோப்பியர்கள் உலக மக்களுக்கு சாக்லேட்டை அறிமுகப்படுத்தியதாக குறிப்புகள் உள்ளன. அதனால் இந்த தினத்தை சாக்லேட் தினமாக வருடந்தோறும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கோக்கோ விதையிலிருந்து உருவாகும் சாக்லேட்டை ஆரம்பகாலத்தில் குடிக்கிற பானமாக தயாரித்து கூழாக்கி குடித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த காலத்தில் ராஜாக்களின் விருந்துகளில் முக்கிய உணவாக இருந்திருக்கிறது சாக்லேட் விதைகள் அவ்வளவு வாசனையாக இருந்தாலும் தனியாக அதைச் சாப்பிட முடியாத காரணத்தினால் தேன், பால், பழம் போன்றவற்றில் சேர்த்துப் பிசைந்து முதலில் சாப்பிட ஆரம்பித்து உள்ளார்கள்.


