தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் முதலாவது ஆண்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட தொமுச இணைப்புடன் பல்வேறு தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் முதலாவது ஆண்டு விழா, சங்கப் பொறுப்பாளர்கள் சசிக்குமார், செல்வம், ஜான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் ஆலோசனையின்படி, மாவட்ட மீனவரணிப் பொறுப்பாளர் அந்தோணிஸ்டாலின் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் கேக் வெட்டி அங்கிருந்த அனைவருக்கும் வழங்கியதோடு, ஆட்டோ தொழிலாளர்கள் அனைவரும் எந்நாளும் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இவ்விழாவில் சங்க ஆலோசகர்கள் ஜஸ்டின், யோகேஷ், சட்ட ஆலோசகர் மணிகண்ட ராஜா மற்றும் உறுப்பினர்கள் இம்மானுவேல், தாமஸ், அந்தோணி ரமேஷ், ராஜா, சிலுவை அந்தோணி தொம்மை, சுரேஷ், பிரைட்டன், சந்தனகுமார், மோகன்ராஜ், மைக்கேல் காலின்ஸ், தமிழ்செல்வன், ஜவஹர் உட்பட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


