5. கே.டி.கோசல்ராம் வாழ்ககை வரலாறு
கலிங்கர் கே. து£சிமுத்து நாடார் திருமதி. பூவம்மாள் இவர்களுக்கு தலைமகனாக 1915 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ம் தேதி ஆறுமுகநேரியில் பிறந்தார் கே.டி.கோசல்ராம். ஆறுமுகநேரி, ஹிந்து உயர்நிலைப்பள்ளியில் 5வது வரையிலும் சென்னை செயின்ட் பால்ஸ் உயர் நிலைப்பள்ளி யில் 10வது வரையும் படித்தார்.
1930 முதலே முழுநேர அரசியலில் ஈடு பட்டார். சிறு வயதிலேயே தேசியப் பற்று ஏற்பட்டு வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு விரோதமான துண்டு பிரசுரங்களை விநியோகித்தார், பலமுறை கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு. இளம் வயது காரணமாக ஒவ்வொரு முறையும் ஒரு வாரம் வரை சப்ஜெயிலில் வைத்து விட்டு, அதன் பின் அடித்து விரட்டிவிடுவார்கள். உப்பு தொழிலாளர் சங்கத் தலைவரானார்.
1942 போராட்டத்தின்போது கலைக்டர் ஹெஜ்மாடியால் இந்திய பாதுகாப்புச்சட்டத் தின்கீழ் கைதுசெய்யப்பட்டார். உப்பு சத்தியாகிரக வழக்கில் ஒரு ஆண்டு தண்டிக்கப்பட்டார். பின் குரும்பூர் சதி வழக்கில் 1 வது எதிரியாகவும். போலீஸ் அதிகாரிகளிடம் துப்பாக்கிகளைப் பிடுங்கியதாகவும், தூண்டிய தாகவும். ஸ்பெஷல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 21 மாதங்கள் சப்ஜெயிலில் கொடுமைப்படுத்தப்பட்டார். சாக்கு சட்டையை அணியச் செய்தும், இரவும் பகலும் கை விலங்கு போட்டு, தனி அறையில் அடைத்து துன்புறுத்தினார்கள்.
திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, கொக்கிரகுளம் சப்ஜெயில்களில் தண்டனை பெற்றார். சரியான சாட்சியமில்லை என்று 21 மாதங்களுக்குப் பிறகு குரும்பூர் வழக்கை வாபஸ் பெற்றார்கள். பின் பாதுகாப்புக் கைதியாக தஞ்சை, வேலூர் சிறைகளில் இருந்தார். 1945 டிசம்பரில் விடுதலை செய்யப்பட்டார்.
ஆலயப் பிரவேச சட்டம் வருமுன்னரே. கி. கனகசபாபதி பிள்ளையுடன் தலைமை தாங்கி, திருச்செந்தூர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச்சென்றார். ஒரு சில முதலாளிகளிடம் இருந்த உப்பு தொழிற்சாலையை 1949ம் வருடம் தான் தலைவராக இருந்த உப்பு தொழிலாளர் சங்கத்திற்கு, மத்திய சர்க்காரிலிருந்து குத்தகையை மாற்றி தொழில் சங்கத்திற்கு சொந்தமாக்கி, கூட்டுறவின் மூலம் தொழிலாளர்களை டைரக்டர்களாகவும் எம்.எஸ். செல்வராஜை தலைவராக்கியும் 1949லேயே சோஷியலிசத்தை நடைமுறையில் செயல்படுத்திக் காட்டினார்.
நாடுகடத்தப்பட்ட இலங்கை இந்தியர் களுக்கென நாசரேத்தில் நூற்புஆலை அமைத்து புதிய சட்ட திட்டங்களுடன் தொழிலாளர்களுக்கு மில்லை சொந்தமாக் கினார் இவருடன் எம்.எஸ் செல்வராஜன் அதிக பங்கு பெற்றார்.
தியாகிகளுக்கு பென்ஷன் கொடுக்க வேண்டுமென 1966 டிசம்பர் மாதம் சட்ட சபை காங்கிரஸ் கட்சியில் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போதைய முதல்வர் திரு. வி. பக்தவத்சலம் அதை ஏற்றுக் கொண்டார்.
1970 செப்டம்பர் மாதம் அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தியாகிகளுக்கு மத்திய சர்க்கார் பென்ஷன் கொடுக்க வேண்டுமென தீர்மானம் கொண்டு வந்து பிரதமர் ஸ்ரீமதி இந்திராகாந்தியை சம்மதிக்க செய்தார்.
1946முதல் 1967வரை சட்டசபை, மேல் சபை உறுப்பினராக இருந்தார் ஜமீன்தாரி ஒழிப்பு மசோதா, ஹிந்து மத பரிபாலன மசோதா, நிலச்சீர்திருத்த மசோதாக்களின் கமிட்டி அங்கத்தினராக இருந்து பல சட்டங்கள் கொண்டுவர காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.
1930 இல் சிறுவனாக இருந்தபோது வெள்ளையராட்சிக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டதால் சிறையிலடைக்கப்பட்டார். 1942 இல் கீரனு£ர் உப்புச்சத்தியாகிரகம், குரும்பூர் இரயில்வே நிலையம் சதி வழக்கு, துப்பாக்கியை கைப்பற்றிய வழக்கு, மெஞ்ஞானபுரம் தபால் ஆபீஸ் சதி வழக்கு, குலசேகரப்பட்டினம் சதி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளால் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் சாக்குச்சட்டை அணிவிக்கப்பட்டும், கைவிலங்கு போடப்பட்டும், துன்புறுத்தப்பட்டார். திருச்செந்து£ர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, கொக்கிரகுளம் சப்ஜெயில்களிலும் வேலு£ர், தஞ்சாவூர் கேம்ப் ஜெயிலிலும் சிறையில் அடைக்கப்பட்டார். 1945 இல் விடுதலை அடைந்தார். அதன் பின் திருநெல்வேலி ஜில்லா காங்கிரஸ் கமிட்டிதலைவராக பணியாற்றியுள்ளார்.
1946&து£த்துக்குடி சட்டமன்ற உறுப்பினர்.
1952,1962&இருமுறை சாத்தான்குளம் சட்டமன்ற உறுப்பினர்.
1957 தெற்கு தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர்.
1977,1980,1984, மூன்று முறை திருச்செந்து£ர் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். புதுவை&மாத இதழ், தினச்செய்தி இதழ்களில் செய்தி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
மணிமுத்தாறு அணைக்கட்டை கட்டிய தென்னாட்டுச் சிங்கம் எனபோற்றப்பட்டவர். நெல்லை ஜல்லாவில் 4 தாலுகாக்கள் பயனடையும் மணிமுத்தாறு திட்டத்துக்கு பொதுமக்களிடம் ஒருகோடியே இருபத்தைந்து லட்ச ரூபாய் அந்த காலத்திலேயே வசூலித்துக் கொடுத்து மணிமுத்தாறு திட்டத்தினைக் கொண்டு வந்தார். 1948ல் புன்னக்காயலில் இருந்து ஆலந்தலை வரை குடி தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்ட 13 கிராமங்களுக்கு குடி நீர்த் திட்டத்தை கொண்டுவந்தார். ஜில்லா முழுவதும் கிராமம் கிராமமாக அவர் நுழைந்து அரசியல் பணிஆற்றாத இடங்களே இல்லை என கூறலாம். கடும் உழைப்பும் விடா முயற்சியும், நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே’ என்று சொல்லும் துணிவும் மிக்க போராட்ட காரர் கே.டி.கே அவர்கள். அவர், தமிழக அரசியலில் தனக்கென ஒரு இடத்தை தேடி வைத்துக்கொண்டவர்
சேது சமுத்திரத்திட்டம் நிறைவேற பாராளுமன்றதில் வலியுறுத்தியவர்.
குலக்கல்வி திட்டம் தமிழ்நாட்டில் ஒழிய குரல் கொடுத்தவர்.
தாழ்த்தப்பட்ட மக்களை திருச்செந்து£ர் கோவிலுக்குள் தடையை மீறி அழைத்துச்சென்ற முற்போக்குச் சிந்தனையார்.
பச்சையாறு திட்டம், விஜயநாராயணம் ராணுவம் ஏவுகனைத் திட்டம்.
பணங்குடி ராக்கெட் தளம், சென்னை கன்னியாகுமரி கடலோர சாலைத்திட்டம்.
திண்டுக்கல் அகல ரயில் பாதைத்திட்டம், காயல்பட்டினம் கூட்டு குடிநீர் திட்டம்,நாசரேத் நு£ர்பாலை கூட்டுறவு உப்புத்தொழிலாளர் சங்கம்.
“டிசிடபுள் யூ” தொழிச்சாலை, காயல்பட்டினம் ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏராளமான தொடக்கப்பள்ளிகள் மருத்துவமனைகள், சாலைவசதிகள், குடிநீர் வசதிகள் அமைத்துத்தந்தவர். மக்கள் உள்ளங்களில் இன்றும் என்றும் வாழ்பவர் கே.டி.கோசல்ராம்.


