1079 – ஓமர் கய்யாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்.
1204 – சாட்டோ கைலார்டு சமரில் இங்கிலாந்தின் ஜான் மன்னர் நார்மாண்டி மீதான தனது ஆதிக்கத்தை பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பிடம் இழந்தார்.
1447 – ஐந்தாம் நிக்கலாசு திருத்தந்தை ஆனார்.
1479 – கனரித் தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது.
1521 – பேர்டினண்ட் மகலன் குவாம் தீவை அடைந்தார்.
1665 – பிரித்தானிய அரச கழகத்தின் அரச கழகத்தின் மெய்யியல் இதழின் முதல் இதழ் வெளியிடப்பட்டது.
1788 – கைதிகளைக் குடியமர்த்தும் திட்டத்தில் முதற்படியாக முதலாவது தொகுதி பிரித்தானியக் கைதிகள் அடங்கிய கப்பல் நோர்போக் தீவை அடைந்தது.
1790 – மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1820 – மிசூரி அமெரிக்காவின் அடிமை மாநிலமாக இணைந்தது.
1836 – அலாமா போர்: டெக்சாசில் அலாமா நகரை மெக்சிக்கோ படைகள் தாக்கிக் கைப்பற்றினர்.
1866 – இலங்கையில் கண்டி மாநகரசபைக்கான முதலாவது தேர்தல் இடம்பெற்றது.
1869 – திமீத்ரி மென்டெலீவ் தனது முதலாவது தனிம அட்டவணையை உருசிய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.
1882 – செர்பிய இராச்சியம் மீண்டும் நிறுவப்பட்டது.
1899 – செருமனியின் பேயர் நிறுவனம் “ஆஸ்பிரினை” வணிகச் சின்னமாகப் பதிந்தது.
1902 – ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1912 – இத்தாலிய-துருக்கிப் போர்: முதல் தடவையாக வான்கப்பல்களை போர் ஒன்றில் இத்தாலியப் படைகள் பயன்படுத்தின.
1933 – பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் அனைத்து வங்கிகளையும் மூடி வங்கி விடுமுறையாக அறிவித்தார்.
1940 – பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் தற்காலிகப் போர் ஓய்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் வான்படைகள் செருமனியால் ஆக்கிரமிக்கப்பட்ட நர்வா என்ற எசுத்தோனிய நகரைக் குண்டுகளால் தாக்கி, வரலாற்றுப் புகழ் மிக்க அந்நகரை அழித்தன.
1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் கோல்ன் நகரம் அமெரிக்கப் படைகளினால் கைப்பற்றப்பட்டது.
1946 – வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்சு வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது.
1953 – ஸ்டாலினின் மறைவையடுத்து சோவியத்தின் பிரதமராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை செயலாளராகவும் கியோர்கி மாலென்கோவ் பதவியேற்றார்.
1957 – ஐக்கிய இராச்சியக் குடியேற்ற நாடுகளான கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரித்தானிய தோகோலாந்து ஆகியன இணைந்து கானா குடியரசு என்ற பெயரில் விடுதலை பெற்றன.
1964 – கிரேக்கத்தின் மன்னராக இரண்டாம் கான்சுடன்டைன் பதவியேற்றார்.
1964 – அமெரிக்காவின் இஸ்லாம் தேசம் அமைப்பின் தலைவர் எலிஜா முகம்மது குத்துச்சண்டை வீரர் காசியசு கிளேயின் பெயரை முகம்மது அலி என மாற்றினார்.
1967 – திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
1967 – பனிப்போர்: யோசப் ஸ்டாலினின் மகள் சுவெத்லானா அலிலுயேவா ஐக்கிய அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார்.
1975 – ஈரானும் ஈராக்கும் தமது எல்லை தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்தன.
1987 – பிரித்தானியப் பயணிகள் கப்பல் எரால்டு ஒஃப் பிரீ என்டர்பிரைசசு 90 செக்கன்களில் மூழ்கியதில் 193 பேர் உயிரிழந்தனர்.
1988 – மூன்று ஐரியக் குடியரசுப் படை வீரர்கள் ஜிப்ரால்ட்டரில் சிறப்பு வான்சேவையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2003 – அல்சீரியாவில் வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 103 பேரில் 102 பேர் உயிரிழந்தனர்.
2007 – இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 70 பேர் வரையில் உயிரிழந்தனர்.
2008 – பக்தாதில் நிகழ்ந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர்.


