நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தொல்லியல் சார்ந்த தேசிய கருத்தரங்கு சுந்தரனார் ஹாலில் வைத்து நடந்தது.
துணை வேந்தர் முனைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். பதிவாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். பேராசியர் மற்றும் நிகழ்ச்சி பொறுப்பாளர் ஸ்ரீனிவாஸ் வரவேற்றார். நிகழ்ச்சியில் திருச்சி மண்டல தொல்லியல் துறை இயக்குனர் முனைவர் அருண்ராஜ் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது உலக அளவில் தொல்லியல் துவங்கிய வரலாற்றையும், இந்தியாவில் தொல்லியல் துறை தோன்றி வரலாற்றையும் என்று பேசினார்.
துணை வேந்தர் முனைவர் சந்திரசேகர் பேசும் போது வருகிற மே மாதம் முதல் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தொல்லியல் சார்ந்த கல்வியல் தொடங்க உளளது என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, உதவி தொல்லியல் ஆய்வாளர் யத்தீஸ்குமார், முத்து குமார் உள்பட பலர் பேசினர். பல்கலைகழகத்தில் அகழாய்வு துறையின் இயக்குனர் முனைவர் சுதாகர் பேசும் போது, சீனாவில் இருந்து இரும்பு பாதை ஒன்று இந்தியா வரை உருவாகி உள்ளது. அதன் சுவடுகள் சேலம் வரை நீண்டு உள்ளது. மேலும் ஆய்வு செய்யும் போது, முழு ஆய்வு முடியும் போது ஆதிச்சநல்லூரில் வந்துதான் இந்த இரும்பு பாதை முடிவடையும் என ஆய்வு மூலம் மாலை நடந்த அமர்வில் கேரளா கொச்சின் பேராசிரியர் ராஜேந்திரன், அண்ணாமலை பல்கலைகழக பேராசிரியர் முனைவர் வெங்கடாசலபதி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.


