சட்டமன்ற அதிமுக வேட்பாளர் அறிவிப்பு. ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
தமிழக சட்டமன்றத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதற்கிடையில் இன்றைய தினம் அதிமுக தலைமை 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி போடி தொகுதிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தொகுதிக்கு பழனிச்சாமி, ராயபுரம் தொகுதிக்கு ஜெயக்குமார், விழுப்புரம் தொகுதிக்கு சி.வி.சண்முகம், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டை தொகுதிக்கு தேன்மொழி ஆகியோரை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத்தொகுதி வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முநாதனை அறிவித்துள்ளதை கொண்டாடும் விதமாக அவரது ஆதரவாளர்கள் ஸ்ரீவைகுண்டம் தேவர் சிலை முன்பு அதிமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சிகளில், அதிமுக ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்நாராயணன், அதிமுக மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் சொர்ணபாண்டியன், நகர செயலாளர் காசிராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் கருப்பசாமி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ், பத்மநாபமங்கலம் ஊராட்சி செயலாளர் சுப்பையாபாண்டியன், முன்னாள் நகர செயலாளர் சண்முகசுந்தரம், இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய பொருளாளர் பொன்ராஜ், வார்டு செயலாளர் இருளப்பன், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற தலைவர் மோகன், ராஜ் கோலப்பன்,நகர பெருலாளயர் ஆப்பில் ராமசாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பேரூர் சிங்கப்பண், திருப்புளிங்குடி மாரியப்பன், கருங்குளம் இளைஞரணி செயலாளர் முருகையாபாண்டியன், எம்ஜிஆர் மன்ற தலைவர் பலவேசம், தங்கார் சுப்பையா, ஒன்றிய கவுன்சிலர் வாசிங் நடராஜன், பத்மநாபமங்கலம் குமார், ஆதிச்சநல்லூர் பொண்ணுதுரை, மாரியப்பன். பழக்கடைதுரை, பிஜேபி.வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர் சங்கர், ஒன்றிய தலைவர் சாமிநாதன், பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிதேவர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


