ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் அறிவிப்பு. செய்துங்கநல்லூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
தமிழக சட்டமன்றத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதற்கிடையில் இன்றைய தினம் அதிமுக தலைமை 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி போடி தொகுதிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தொகுதிக்கு பழனிச்சாமி, ராயபுரம் தொகுதிக்கு ஜெயக்குமார், விழுப்புரம் தொகுதிக்கு சி.வி.சண்முகம், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டை தொகுதிக்கு தேன்மொழி ஆகியோரை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத்தொகுதி வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முநாதனை அறிவித்துள்ளதை கொண்டாடும் விதமாக அவரது ஆதரவாளர்கள் செய்துங்கநல்லூரில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ்.பி.சண்முகநாதனை அறிவித்ததை கொண்டாடும் விதமாக அதிமுக மாவட்ட அவைத்தலைவர் திருப்பாகடல் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சிகளில், அதிமுகவினர் கலந்து கொண்டனர்.


