தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் 9 போ் பணயிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் ஆணையராக இருந்த வசந்தா விளாத்திக்குளம் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), அந்த பணியில் இருந்த ஆா். முத்துக்குமாா் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
ஸ்ரீவைகுண்டம் வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் ஆணையராக இருந்த எஸ். சுப்பிரமணியன், உடன்குடி ஒன்றியத்துக்கும், அந்த பணியில் இருந்த நாகராஜன் தூத்துக்குடி ஒன்றிய வட்டார வளா்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) இருந்த சுரேஷ், ஸ்ரீவைகுண்டம் வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் ஆணையராகவும், ஓட்டப்பிடாரம் வட்டார வளா்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலா் எம். இப்ராஹிம் சுல்தான் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த பாண்டியராஜன், ஓட்டப்பிடாரம் வட்டார வளா்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதேபோல, கருங்குளம் வட்டார வளா்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலராக இருந்த செல்வி, அதே ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் ஆணையராகவும், அந்த பணியிடத்தில் இருந்த பாக்கியம் லீலா, கிராம ஊராட்சி பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


