சாத்தான்குளம் பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற 42 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை தடுக்க முககவசம் அணிதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர்கள் அருள் சாம்ராஜ், ஜான்சன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் சென்ற 42 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் பாஸ்கரன் கூறுகையில், ஒமிக்ரான் மற்றும் கரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிதல் வேண்டும். மேலும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தேவையின்றி பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார்


