தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் மாணிக்கம். இவர் ஸ்ரீவைகுண்டம் குமர குருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் தான் சிவகளை நாகரீகத்தை வெளிக்கொண்டு வர மிகவும் உறுதுணையாக இருந்தவர். இதன் காரணமாகத்தான் கடந்த மூன்று வருடங்களாக சிவகளையில் மாநில அரசு சார்பில் தொல்லியல் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
இதற்கிடையில் கடந்த வாரம் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் ஆசிரியர் மாணிக்கமும் ஒருவர்.
இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள கலைவானர் அரங்கில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆசிரியர் மாணிக்கத்திற்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. விருதினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். அருகில் அமைச்சர் சேகர்பாபு உள்பட பலர் உடன் இருந்தனர்.


