தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத் தேர் பவனி சிறப்பு திருப்பலியுடன் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தின் 441-ம் ஆண்டு திருவிழா மற்றும் 16-வது தங்கத்தேர் திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தங்கத்தேர் பவனி இன்று நடைபெற்றது.விழாவையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு பங்கு தந்தை குமார்ராஜா நடத்திய முதல் திருப்பலி, 5.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலியும், காலை 7 மணிக்கு தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
தங்கதேர் திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் பிலிப் நேரி நடத்தினர். அதுபோல் தங்கத்தேர் பவனியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ், இலங்கை மன்னார் பிஷப் இம்மானுவேல் பர்னான்டோ ஆகியோர் ஜெபம் செய்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் அன்னையின் தங்கத் தேர் பவனி நடைபெற்றது. மதியம் 12.30 மணிக்கு தங்கத் தேர் நன்றி திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு 82-வது நிகழ்ச்சியாக பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.
இந்த விழாவில் இந்தியா முழுவதும் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தம் என பல்லாயிரக்கணக்கானோர் மக்கள் பங்கேற்று உள்ளனர். அப்போது அவர்கள் மரியே வாழ்க.. பனிமய தாயே வாழ்க.. பார் போற்றும் அரசியை வாழ்க என விண்ணதிர கோஷமிட்டனர். விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.தூய பனிமயமாதா பேராலயத்தின் தங்கத்ரோரோட்ட திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார், உள்பட இறைமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். தங்கத் தோ் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் கூடியுள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் சுமார் 2000 போலீஸார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


