தூத்துக்குடி அஞ்சலகங்களில் மாலை 6 மணி வரை பதிவு விரைவு மற்றும் பார்சல் தபால்கள் புக்கிங் செய்யும் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தாெடர்பாக தூத்துக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தபால்களை பொது மக்களுக்கு குறைந்த செலவில் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடையும் வண்ணம் அஞ்சலகங்களில் விரைவு மற்றும் பார்சல் சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் இரவு 07:30மணி வரை பதிவு தபால் மற்றும் பார்சல் புக்கிங் சேவைகளும், இரவு 08:00மணி வரை விரைவு தபால்கள் புக்கிங் சேவைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. பணி நிமித்தமாக அஞ்சலக சேவையை பெற இயலாத பொது மக்களும் அஞ்சலகத்தில் விரைவு மற்றும் பார்சல் சேவையை பெற வசதியாக இந்த சேவை நேரத்தை குறிப்பிட்ட அஞ்சலகங்களில் நீடித்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட நியூ காலனி மற்றும் போல்நாயக்கன்பேட்டை துணை அஞ்சலகங்களில் மாலை 06:00 மணி வரை பதிவு விரைவு மற்றும் பார்சல் தபால்கள் புக்கிங் செய்யும் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால நீட்டிப்பு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே பொதுமக்கள் இந்த சேவையை பெற்று பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.


