தூத்துக்குடியில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி தூத்துக்குடி-மும்பை சிறப்புரயில் (01144) அதிகாலை 4 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருத்தணி வழியாக இயக்கப்படுகிறது.
மாலை 5.15 மணிக்கு தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலும், இரவு 8.20 மணிக்கு தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலும், இரவு 9.45 மணிக்கு தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரயிலும் (06002), இரவு 10.35 மணிக்கு தூத்துக்குடி-ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.


