முத்தாலங்குறிச்சி நரசிம்மர் கோயில் மிகவும் பழமையான கோயில். இந்த கோயில் சிதிலமடைந்து காணப்பட்டது. இந்த கோயிலில் திருப்பணி செய்ய வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இந்த கோயில் திருப்பணி செய்ய தமிழக அறநிலையத்துறையினர் 10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளனர். திருவைகுண்டம் ஆய்வாளர் பிரிவில் கீழ்கண்ட நலிவடைந்த கோயில்கள் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன
1. அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் கால்வாய்_ ரூ10.00 லட்சம்2. அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில் முத்தலாங்குறிச்சி_ரூ10.00 லட்சம்3. அருள்மிகு ரங்கராஜ பெருமாள் திருக்கோயில் பேரூர்_ரூ15.00 லட்சம்4. அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் தெற்கு காரசேரி_ரூ 20.00 லட்சம் 5. அருள்மிகு நவநீத கிருஷ்ணசாமி திருக்கோயில் மணக்கரை_ரூ 40 லட்சம்
மேலும் நகர்ப்புற திருப்பணி செய்ய கீழ்கண்ட கோயில்கள் தேர்ந்ததெடுக்கப்பட்டு, அதற்காக தலா 10 லட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.1. அருள்மிகு நதிக்கரை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருவைகுண்டம்2. அருள்மிகு தூண்டி விநாயகர் திருக்கோயில் திருவைகுண்டம்3. அருள்மிகு கிருஷ்ணசாமி திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் 4. அருள்மிகு நாராயணசாமி திருக்கோயில் நாகன் காலனி.
இதற்கான ஏற்பாடு செய்த தமிழக முதலமைச்சருக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும் அறநிலையத்துறையினருக்கு பக்தர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.


