டாடா குழுமத்தின் நிறுவனர் J N டாடா பிறந்தநாள் முன்னிட்டு நடந்த இரத்ததான முகாமில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி இரத்த தானம் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் டாடா குழும நிறுவனர் J N டாடா பிறந்தநாள் முன்னிட்டு ஒரே நாளில் 100 பேர் இரத்த தானம் வழங்கினர். இதில் முதல் நபராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பணையை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் மாநிலத் தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி இரத்ததானம் வழங்கினார். தற்போது இவர் 19வது முறை இரத்தம் வழங்கியுள்ளார் என்பது குடும்பத்தக்கது.
இந்த இரத்ததான முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் tata குழுமத்தினர் மற்றும் மத சமூக சேவை நிறுவனத்தினர் சிறப்பாக செய்தனர்


