நெல்லை – தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடைந்து 20.11.2012 அன்று போக்குவரத்து துவங்கியது. இந்த சாலை வழியாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கும், துறைமுகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கும் செல்லும். அதே போல் தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு செல்லும் வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்லும்.
இந்த சாலைப்பணிகளில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் பிரமாண்டமான பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் அமைக்கப்பட்டது முதலே பாலத்தில் சேதம் ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து 8 முறை இந்த பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலத்தை ரூபாய் 13 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும் என்று அறிவிக்கட்டு கடந்த மாதம் பணிகள் தொடங்கியது.
கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக நடந்து வந்த பணி தற்போது தொடர் மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வெளி மாநிலத்தில் இருந்து வந்த பணியாளர்கள் இங்கு தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். எனவே மழை குறையும் சமயங்களில் பணிகள் தொட வாய்ப்புள்ளது.


