அக்கால ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில்
சி.எம்.எஸ். மிஷனரி சங்கம் மூலம் உருவாக்கப்பட்ட சபைகளுக்கான பேராயராக மகாகனம். சார்ஜெண்ட் அவர்களும் எஸ்.பி.ஜி.மிஷனரி சங்கம் மூலம் உருவாக்கப்பட்ட சபைகளுக்கான பேராயராக மகாகனம். ராபர்ட் கால்டுவெல் அவர்களும் 11.03.1877 இல் நியமிக்கப்பட்டார்கள்.
மேற்கண்ட இவ்விருவரின் காலத்திற்குப் பிறகு 2 மிஷன்களுக்கான சபைகளையும் சேர்த்து கவனிக்கும் அளவில் ஒரே பேராயராக மகாகனம். மார்லி அவர்கள் 28.10.1896 இல் நியமிக்கப்பட்டார்கள் அவர்களுக்கு சபைகளில் திடப்படுத்தல் கொடுத்தல், தேவாலயங்களைப் பிரதிஷ்டை செய்தல் போன்ற ஆன்மீக அதிகாரங்களே கொடுக்கப்பட்டிருந்தது.
சி.எம் .எஸ் மிஷன் சபைகளுக்கான நிர்வாக அதிகாரம் சி. எம். எஸ். மிஷன் தலைமை மிஷனரி எனும் ஷிuஜீமீக்ஷீவீஸீtமீஸீபீவீஸீரீ விவீssவீஷீஸீணீக்ஷீஹ் ஆக பணி செய்து வந்தவர்களான கனம்.தாமஸ் வாக்கர் அவர்களிடம் 1897 வரையும், 1897 முதல் முதல் 1915 வரை கார் மிஷனரி என அன்போடு அழைக்கப்பட்ட கனம். இ.எஸ். கார் ஐயரவர்களிடமும் இருந்து வந்தது.
மகாகனம்ஏ.ஏ.வில்லியம்ஸ் பேராயர் அவர்களுக்கு பின்பு 28.11.1915 இல் பேராயர் பொறுப்பேற்று நெல்லைக்கு 08.12.1915 இல் வந்த மகாகனம். உவாலர் அவர்கள் இரு மிஷின் சபைகளின் நிர்வாக அதிகாரம் தம்மிடம் இருந்தால் தான் ஊழியப் பணிகளை சிறப்பாக செய்ய முடியும் என பதவி ஏற்கும் முன்பே கூறி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அதைப் பெற்றுக் கொண்டவராகவே பேராயர் பொறுப்பை ஏற்றார்
1916 இல் அவரால் அவரையே ஆலோசனை தலைவராகக் கொண்டு இரு மிஷன் சங்கங்களுக்கும் பொதுவாக ஆலோசனை சங்கம் நிறுவப்பட்டது.
1917 இல் இரு மிஷன் சபைகளுக்கும் பொதுவான ஜெபப் புத்தகம் அவரால் வெளியிடப்பட்டது.
11 & 12.10.1917 ஆகிய இரு நாட்களில் இரு மிஷன் சபைகளின் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அத்தியட்சாதீன ஆலோசனை அமைப்பு எனும் அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பு பேராயரால் நிறுவப்பட்டு அது கூட்டப்பட்டது.
அதில் 93 குருவானவர்கள், 135 சபை (லே) அங்கத்தினர்கள் பங்கேற்றனர். அந்த அத்தியட்சாதீன ஆலோசனை அமைப்பிலிருந்து அத்தியட்சாதீன நிர்வாக சபை அவரால் அமைக்கப் பட்டது. இந்த நிர்வாக சபையில் தேர்ந்தெடுக் கப்பட்ட ஐந்து குருவானவர் களும் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சபை கமிட்டி உறுப்பினர்களும். பேராய ரால் நியமனம் செய்யப்பட்ட ஐந்து குருவானவர்களும் ஐந்து சபை யாரும் 47 பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.
மேற்கண்ட அத்தியட்சாதீன ஆலோசனை அமைப்பு மற்றும் அத்தியட்சாதீன நிர்வாகசபை ஆகியவை குறித்து சி.எம்.எஸ். குருவானவர் ரெவர்ண்ட் ஆர். எப். ஆர்டில் அவர்கள் தலைமையில் சி.எம்.எஸ். குருக்களும் சபையாரும் வலிமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள் ஆனால் அது பயனில்லாது போய்விட்டது.
இக்கால திருமண்டல நிர்வாக அமைப்புக்கு அடித்தளமாக அமைந்தது இந்த நிர்வாக அமைப்பே.
07.04.1918 இல் நாசரேத்தில் அத்தியட்சாதீன நிர்வாக சபை கூடியது. அதில் இரு மிஷன் சபைகளுக்கு மான சொத்துக்கள் ஜிவீக்ஷீuஸீமீறீஸ்மீறீவீ ஞிவீஷீநீமீsணீஸீ ஜிக்ஷீust கிssஷீநீவீணீtவீஷீஸீ – ஜிஞிஜிகி என்ற பெயரில் திருநெல்வேலி அத்தியட்சாதீன பொக்கிஷ ஆளுகை சங்கத்திற்கு உள்ளானது. இது 1919 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
தொடக்கத்தில் ஜிஞிஜிகி சிவிஷி && ஜிஞிஜிகி ஷிறிநி என்ற பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பின்னர் ஜிஞிஜிகி என்ற பொதுப் பெயரில் அத்தியட்சாதீன ஆளுகை அமைப்பு அழைக்கப்பட்டது.
1919 இல் நூற்றாண்டு மண்டபத்தில் இரு மிஷனரி சங்க போதகர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சபை உறுப்பினர்கள் அடங்கிய ஐக்கிய கூட்டத்தில் இரு மிஷன் சபைகளுக்கும் உண்டான அனைத்து தேவாலயங்களிலும் ஆல்டர் திருமேசையில் சிலுவை வைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டது என்றும் அந்த தீர்மானத்தை சி.எம்.எஸ். மிஷன் சங்கத்து போதகர் ரெவரண்ட் சாலமோன் பாக்கியநாதன் அவர்கள் தலைமையில் சி.எம்.எஸ்.மிஷன் போதகர்களும் சபை கமிட்டி உறுப்பினர்களும் அதற்கு வலிமையான தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தார்கள் . இது சி.எம்.எஸ்.மிஷனரி சங்க அடிப்படை கொள்கைக்கும் சித்தாந்தத்திற்கும் விரோதமானது என்பதை அவர் அக்கூட்டத்தில் வலியுறுத்தி பேசியதாக அறிந்து கொள்ள முடிகிறது.
இரு மிஷன்களையும் சார்ந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து பன்னிரண்டாயிரமாக இருந்தது
இதில் சி.எம்.எஸ். மிஷன் சபையாரின் எண்ணிக்கை 79,000
எஸ்.பி.ஜி. மிஷன் சபையாரின் எண்ணிக்கை 33,000
1895 இல் இரு மிஷன்களுக்கும் பொதுவான பேராயராக மகாகனம். மார்லி அவர்களும் அவருக்குப்பின் மகாகனம். ஏ.ஏ.வில்லியம்ஸ் அவர்களும்அவருக்குப்பின் மகாகனம் உவாலர் அவர்களும் பொறுப்பேற்றார்கள்.
இம்மூவரும் சடங்காச்சாரங்களில் பற்று கொண்டவர்களாக இருந்தனர் என கூறப்படுகிறது. 1924 இல் சி.எம்.எஸ்.மிஷன் சபைகளுக்குள் ஏற்பட்ட சுத்தாங்க சுவிசேஷ சபை பிளவு –
தொடக்ககால எஸ்.பி.ஜி மிஷனரிகள் தங்கள் சபைகளில் சடங்காச்சாரங்களை நடைமுறைப்படுத்தவில்லை,
நாசரேத் மிஷனரி ரெவரண்ட் மர்காஷிஸ் ஐயரவர்கள் கால முதல் (1876) சடங்காச்சாரங்கள் எஸ்.பி.ஜி.மிஷன் சபைகளுக்குள் மிக அதிகமாக புகுத்தப்பட்டது குறிப்பாக நாசரேத்தில் அதன் சுற்று கிராம சபைகளில், சாயர்புரத்தில் அதன் சுற்று கிராம சபைகளில் ஆராதனை வேளைகளில் கீழ்கண்ட சடங்காச்சாரங்கள் அதிகமாக புகுத்தப்பட்டன.
1.திருமேஜையில் சிலுவை . விளக்குத்தண்டுகள், மெழுகுவர்த்திகள்,பூந்தொட்டிகள் வைக்கப்பட்டது. திரு மேஜை மீது பல வர்ண நிறம் கொண்ட துணி விரிப்புகளை பயன்படுத்தி மூடுதல் மற்றும் திருவிருந்து பாத்திரங்களை மூடுதல்
2. ஆல்டர் முன்பாக தலைகுனிந்து வணக்கம் செலுத்துதல், முழங்கால் படியிடுதல்.
3. தேவாலய ஆராதனை வேளைகளில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி – திரியேக துதி பாடும்போது, உச்சரிக்கும் போது ஆல்டரை நோக்கி திரும்புதல்.
4.போதகர் பலவர்ண மேலாடை ஸ்டோல் அணிதல்.
5.தேவாலய கண்ணாடிகளில் அப்போஸ்தலர் படங்கள் மற்றும் கிறிஸ்தவ அடையாள சித்திரங்கள் வரைதல்.
6. ஆராதனை வேளைகளில் தூபம் காட்டுதல்.
7.திருவிருந்து ஆராதனையில் அப்பம் திராட்சரசம் ஸ்தோத்தரித்து ஆசீர்வதிக்கப்படுகையில் தேவாலய மணியை ஒலிக்கச் செய்வது.
8.பாடகர் பவனிகளில் முன் நிலையில் சிலுவையை ஏந்திச் செல்வது.
9.பண்டிகை / திருவிழா நாட்களில் அதற்கான சிறப்பு திருச்சிலுவையை பாடகர் பவனியில் பின் நிலையில் ஏந்திச் செல்வது.
10.தேவாலயத்திற்கான பெயரை உடைய திருக்கொடியை பாடகர் பவனியின் நடுவே ஏந்திச் செல்வது.
11. ஆல்டர் திருமேஜையை ஆல்டரின் சுவற்றோடு சேர்த்து ஒட்டி போடுவது.
12. ஆல்டர் திருமேஜையின் பக்கவாட்டில் நின்று ஜெபம் நடத்துவது.
மேற்கண்ட சடங்காச்சாரங்களுக்கு சாயர்புரத்தில் இருந்த கனம்.ஆதம்சன் ஐயரவர்களும் நாசரேத்தில் இருந்த கனம். மர்காஷிஸ் ஐயரவர்களும் ஆகிய ஆக்ஸ்போர்டு எழுப்புதல் சார்ந்த எஸ்.பி.ஜி.குருமார்களே காரணமாயிருந்தனர்.
1879 இல் சாயர்புரம் மிஷனரி கனம் ஆக்ஷன் ஐயர் அவர்களால் சாயர்புரம் தூய திரித்துவ தேவாலயத்தின் ஆல்டர் திருமேஜையின் மேல் சிலுவை வைக்கப்பட்டது.
ஆல்டர் திரு மேஜையின் முன் தலை குனிவது, முழங்கால்படியிட்டு வது என்ற புதிய பழக்கமும் சாயர்புரத்தில் புகுத்தப்பட்டது.
சாயர்புரத்தில் தூபம் காட்டப்பட்டது
இத்தகைய சடங்காச்சாரங்களைகளை சாயர்புரம் சபையார் எதிர்த்த போதும் சாயர்புரம் மிஷனரி தாம் எடுத்த கொள்கையில் நிலைத்து நின்றார். கடைசியில் சபையார் இணங்கி போனார்கள். சாயர்புரம் தேவாலயத்தில் புகுத்தப்பட்ட சடங்காச்சாரங்கள் நாசரேத், முதலூர் ஆகிய பெரிய சபைகளுக்கும் பரவி அந்த சபைகளை சுற்றியிருக்கிற அனைத்து எஸ்.பி.ஜி. சபைகளுக்குள்ளும் புகுந்தது. ஆராதனை வேளைகளில் சடங்காச்சாரங்கள் எஸ்.பி.ஜி. மிஷன் சபைகளில் புகுந்ததைக் கண்டு திருநெல்வேலி சி.எம்.எஸ். மிஷன் குருமார்களும்,
சி.எம்.எஸ். மிஷன் சபையார்களும் தங்களுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தார்கள்.
(நதி வற்றாமல் ஓடும்)


