தூத்துக்குடி மாவட்டம் மங்களகிரி பகுதியை சேர்ந்த மார்ஷல் எசுவடியான் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் கிராமத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் கடந்த 2019 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலக வளாகத்தில் விநாயகர் கோவில் கடந்த 2020ம் ஆண்டு கட்டப்பட்டு உள்ளது.
13.09.2010 தேதியிட்ட தமிழக அரசின் அரசாணையின் படி அரசு அலுவலகங்கள், அலுவலக வளாகங்களில் மத வழிப்பாட்டு தலங்கள் கட்டக்கூடாது. மதசார்பற்ற நாட்டில், அரசு அலுவலகங்களில் இது போன்று வழிபாட்டு தலங்கள் அமைக்க கூடாது என அரசாணை உள்ளது. இந்த அரசாணையை மீறி, ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலக வளாகத்தில் கோவில் கட்டப்பட்டு உள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்டம், வி.ஆதிச்சநல்லூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு கோவிலை அகற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். என மனுவில் கூறி உள்ளார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த கோவிலில் எந்த கடவுள் வழிபாடு நடக்கிறது. அரசு அலுவலக வளாகத்தில் கோவில் கட்டிய போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவில் போதிய தகவல்கள் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


