கொங்கராயகுறிச்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
இந்த முகாமிற்கு கொங்கராயகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் ஆபிதா பானு தலைமை வகித்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் வெங்கடேசன் சிறப்புரை ஆற்றினர்.
தாமஸ், மருத்துவ அலுவலர்கள் முருகேஸ்வரி, ஜெயவாணி, கிருஷ்ணஜோதி, சித்த மருத்துவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமிற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ முகாம் நடந்தது. வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் மூலிகை கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. கொரோனாவுக்கு பின் வலுத்தரும் சித்த மருந்துகள், குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், சுக மகப்பேறு தரும் மகப்பேறு சஞ்சீவி ஆகிய சித்த மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கொங்கராயகுறிச்சி பஞ்சாயத் தலைவர் மூலிகை மரக்கன்றுகள் வழங்கினார் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் செல்வகுமார் மருந்தாளுனர் சுபா பணியாளர் மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ஆய்வக நுட்புணர்கள், காசநோய் பிரிவு, கண் சிகிச்சை பிரிவு பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


