கருங்குளம் தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெயந்தன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத் துறையின் மூலம் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கீழ வல்லநாடு அரசு தோட்டக்கலை பண்ணையில் நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சியில் பூங்கொத்து மற்றும் பூ அலங்காரம் செய்தல் நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவுதல் மற்றும் பராமரிப்பு செய்தல் மற்றும் தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம் ஆகிய தலைப்புகளில் 30 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தோட்டக்கலைத் துறையின் இணையதளத்தில் https://www.tnhorticulture.tn.gov.in/ இடம்பெற்றுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பயிற்சியாளர்களுக்கு 30 நாட்களுக்கு போக்குவரத்து செலவுக்காக நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 வழங்கப்படும். மேலும் அத்தொகை பயிற்சியாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று கருங்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயந்தன் தெரிவித்துள்ளார்.


