இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்றால் ஆங்கிலேயரின் ஆயுதங்கள் பாதுகாக்கப்படும் கிடங்கை அழித்தே தீர வேண்டும் என்று முடிவு செய்தார் தளபதி சுந்தரலிங்கம்.
24.08.1801 இல் இரவு நேரம் எவரும் பார்க்காதவாறு தன்னுடைய முறைப்பெண் வடிவுடன் ஆயுதக் கிடங்கினுள் நுழைந்த சுந்தரலிங்கம் அவர் மீதும் வடிவு மீதும் எண்ணையை ஊற்றிக் கொண்டு. தீப்பந்தத்தைப் பற்றவைத்தவாறு வெடிக் கிடங்கினுள் பாய்ந்தனர் வெடித்துச் சிதறிதரைமட்டமானது.
அந்தோ! தங்களுடைய இன்னுயிரைக் கொடுத்தனர். ஆங்கிலேயரின் படைபலம் குறைந்தது.
அமைச்சர் தானாபதிபிள்ளை. நாகலாபுரம் சௌந்திர பாண்டியனும் கைது செய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டனர். இக்கட்டான நெருக்கடி நிலையில் பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து தப்பித்த கட்டபொம்மன் புதுக்கோட்டையில் உள்ள கலியாப்பூர்காடுகளில் தலைமறைவானார்.
புதுக்கோட்டை விஜயரகுநாதன் தொண்டைமான் ஆங்கிலேயருடன் நட்பாக இருந்தார். ஆங்கிலேயரின் சூழ்ச்சியின்படி கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு. விசாரணை என்ற பெயரில் அனைத்து பாளையக்காரர்களின் முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டார் கட்டபொம்மன்.
கயத்தாறு கோட்டை முன்பாக நின்ற புளிய மரத்தில் 1799 அக்டோபர் 16இல் தூக்கிலிட அழைத்துச் செல்லப்பட்டார். சுற்றிலும் கைகட்டி அடிமைகளாய் நின்ற பாளையக்காரர்களை அலட்சியமாகப் பார்த்துக் கொண்டே தூக்கு மேடைக்குச் சென்றவர். தூக்குக் கயிற்றைத் தம் கழுத்தில் போட்டு வீரமரணம் எய்தினார்.
பாளையக்காரர்களை வளரவிடாமல் ஒடுக்க வேண்டும். ஆயுதங்களையும் தடை செய்திட வேண்டும் என்ற ஆங்கிலேயர் திருநெல்வேலிச் சீமையில் தன்மானத்துடன் கம்பீரமாக நின்ற 42 கோட்டைகளை இடித்துத் தரைமட்டமாக ஆக்கினார். ஒரு சில பாளையக்காரர் தங்களையும், தங்களது செல்வாக்கையும், தங்களது கோட்டையையும் பாதுகாத்திட ஆங்கிலேயருக்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.
பாளையங்கோட்டைச் சிறையில் வாள்வீரன் ஊமைத்துரையும். அவரது படை வீரர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆங்கிலேயருக்கு எதிராக நின்ற மருது பாண்டியர்கள் இதனை அறிந்து வெகுண்டெழுந்தனர். சிவத்தையா தலைமையில் ஒட்டநத்தம் என்ற கிராமத்தில் நள்ளிரவில் சந்தித்து ஊமைத்துரையை பாளையங்கோட்டைச் சிறையில் இருந்து தப்பிக்க வைப்பது பற்றி திட்டமிட்டனர்.
1800 பிப்ரவரி 2ஆம் தேதி பாளையங்கோட்டைப் பகுதியில் நள்ளிரவு நேரம், முருகன் கோவிலுக்குக் காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள் போலவும். வியாபாரிகள் போலவும் மாறுவேடமிட்டு, ஆயுதங்களை மறைத்து வைத்து எடுத்துச் சென்றனர். பக்தர்களுக்குரிய காவடிப்பாடலுடன் அரோகரா சப்தத்துடன் சென்றதால் எவருக்கும் சந்தேகம் வரவில்லை. திடீரென கொரில்லா முறையில் தாக்குதல் நடத்தினர்.
தங்களை எதிர்த்த 48 காவலர்களை வெட்டிச் சாய்த்து விட்டு ஊமைத்துரையும், வீரர்களையும் மீட்டனர். அதிரடியாக மீண்டவர்கள் பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பினார். அதிர்ச்சி அடைந்தனர். காரணம் கோட்டை முழுவதும் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டிருந்தது.
மனம் தளராத ஊமைத்துரை இரவு பகல் பார்க்காமல் தன்னுடைய மக்களுடன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டார். ஆறுநாளில் பதனீரும் முட்டையும் கலந்து எஃகு கோட்டை போல பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை மீண்டும் கட்டினர்.
கோட்டைக்குள்ளே பெரியவர்கள். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க ரகசிய சுரங்கம் போல நிலவறையும் அமைத்தார். 500 அடி நீளம் 300 அடி அகலம் கொண்டு முள்வேலிகளால் சுற்றி நெருக்கமாக இறுக்கி அமைக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி மண்கோட்டை ஆங்கிலேயருக்கு ஆச்சரியத்தையும் அச்சத்தையும் தந்தது.
கோட்டையின் மேற்குப் பகுதியில் 900 அடி தூரத்தில் 16 அடி உயரத்தில் 40 அடி நீளம் 15 அடி அகலத்தில் மேடை அமைத்து அதன் மீது பீரங்கிகளை நிலை நிறுத்தினர்.


