நெல்லை கால் கரை சுடலைமுத்து தேவர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்ட காவ்யா பதிப்பகம் சார்பில் நெல்லை காவியா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொமு சி. கிரா. அழகிரிசாமி ஆகியோரின் நூற்றாண்டு கொண்டாட்டத்தோடு, 16 நூல்கள் வெளியிடப்பட்டது. இதில் எழுத்தாளர் காவ்யா சண்முகசுந்தரம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, முனைவர் இராசையா, முனைவர் கு.டகோபன், இரா.நரேந்திரகுமார், ராஜா ஆகியோரின் நூல்கள் வெளியிடப்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு ஹோட்டல் ஜானகிராம் & நடந்த நிகழ்ச்சிகக்கு பேராசிரியர் வளன் அரசு தலைமை வகித்தார். காவ்யா சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். பேராசிரியர் பெங்களூர் சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார்.
காவ்யாவின் புராணத்தினை கலைமாமணி வேலவன் சங்கீதா வில்லிசையில் இசை க்க நிகழ்ச்சி துவங்கியது.
இந்த விழாவில் தொமு சி ரகுநாதன் நூல்களை போராசிரியர் சிவசு வெளியிட்டார். ரகுநாதனின் கவிதைகளை பேராசிரியர் ராமச்சந்திரனும், ரகுநாதனின் கட்டுரைகளை பேராசிரியர் கட்டளை கைலாசமும், ரகுநாதனின் சிறுகதைகளை எம் எம் தீன்னும், ரகுநாதனின் நாவல்களை பேராசிரியர் ஹரிஹரனும், ரகுநாதனின் நாடகங்களை எழுத்தாளர் கிருஷியும் பெற்றுக்கொண்டனர்.
அழகிரி சாமியின் நூற்றாண்டு சிறப்பு விழாவை முன்னிட்டு மு பரமசிவத்தின் அழகிரிசாமி இலக்கியத் தடம் என்ற நூலை எழுத்தாளர் தளவாய் நாதன் வெளியிட்டார். எழுத்தாளர் சக்தி வேலாயுதம் பெற்றுக்கொண்டார்.
கி.ரா. நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பேராசிரியர் சு. சண்முக சுந்தரத்தின் கிராமியம் நூலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் சுதாகர் வெளியிட்டார். சியாமளா புத்தக அங்காடி நிர்வாகி வரதராஜன் பெற்றுக் கொண்டார்.
சுடலைமுத்து தேவர் நூற்றாண்டு சிறப்பு வெளியீட்டு நூல்களை திருச்சி நெருஞ்சி இலக்கிய வட்ட பொறிஞர் கவிஞர் முத்தமிழ் விரும்பி வெளியிட்டார். சுடலைமுத்து சண்முகசுந்தரத்தின் நெல்லை சிற்றிலக்கியங்கள் என்ற புத்தகத்தினை சதக் அப்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியர் சௌந்தர மகாதேவன் பெற்றுக் கொண்டார். ஆரிய முத்துப்பட்டனும், அருந்ததிய காதலிகளும் என்ற நூலை ஒய்வு பெற்ற ஆசிரியர் ஐயப்பனும், பொருநை நாவலை பேராசிரியர் சங்கரியும் பெற்று கொண்டனர்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவின் மூன்று நூல்களை நல்லாசிரியர் அகஸ்தீஸ்வரன் வெளியிட்டார். நெல்லை கோயில்கள் நூலை கவிஞர் சிற்பி பாமாவும், தென்பாண்டி சீமையிலே பாகம்&1 என்ற நூலை காவ்யா முத்துலெட்சுமியும், தென்பாண்டி சீமையிலே பாகம்&2 என்ற நூலை கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி பெற்றுக்கொண்டனர்.
எழுத்தாளர் நரேந்திரகுமார் ராஜாவின் திராவிட மரபணு நூலை மணிமேகலை பெற்றுக்கொண்டார். முனைவர் ராசையாவின் பூலித்தேவன் சிந்து நூலை தமிழ் செம்மல் பாமினி வெளியிட்டார். எழில் சேவியர் பெற்றுக்கொண்டார். முனைவர் சடகோபனின் சங்கத்தமிழ் மாலை ஆண்டாள் திருப்பாவை நூலை முனைவர் கோ கணபதி சுப்ரமணியன் வெளியிட இந்திய தொலைபேசித் துறையை சேர்ந்த பாப்பையா பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் செய்து வருகிறார்.


