4 ம் வகுப்பு படிக்கும் போது சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் பற்றிய பாடங்கள் இருந்தது. அந்த பக்கங்களை என் ஆசிரியரிடம் ( துர்கா மிஸ் ) காண்பித்து , “இது மாதிரி நானும் வரனும்னா என்ன செய்யனும் மிஸ் ? “னு கேட்டேன் .” நல்லா படி..உன்னால முடியாதனு எந்த விஷயமும் இல்லனு நினைச்சு செய்வதை சிறப்பாக திருந்தசெய் ..உன் கனவுகளை பெரிதாக்கு வானமே எல்லை “.. மற்றவர்கள் உன்னை காயப்படுத்தினாலும் நீ நல்லதே செய்டா .கண்டிப்பாக உன்னையும் மற்றவர்கள் படிப்பார்கள் ” என்று ஆசிரியர் கூறினார். அன்று என் மிஸ் கூறியது இன்று நடந்துவிட்டது..நானும் மகாராஷ்டிரா பாடப்புத்தகத்தில் ஒரு பாடமாக.பெருமைக்காக சொல்லவில்லை.. முயற்சித்தால் எதுவும் முடியும். என்னாலே முடியும் என்றால் உங்களாலும் முடியும்..முயற்சித்தால் எதுவும் முடியும்..- jayalaxumi


