தாமிரபரணியில் ஓலைச்சுவடியில் இருந்த தாமிரபரணி வரலாற்றைத் ‘தினமலர்’ மூலமாகத் கோயில் தலப்புராணமாக மாற்றிய அய்யா சங்கரராமன் அவர்கள் என்னைச் காண எனது நூலகத்திற்கு வருகை புரிந்தார். அய்யா, ஸ்ரீவில்லிபுத்தூரான், கோதையூரான் என்ற புனைப்பெயர்களில் எழுதுபவர். எங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கெல்லாம் வழிகாட்டி.
இவருக்கு கடந்த 4ஆம் தேதி நெல்லையில் நடந்த தாமிரபரணி விழாவில் முனைவர் சௌமியா அன்புமணி எம்.எல்.ஏ அவர்களின் கரங்களினால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என ஆசைப்பட்டேன்; இயலவில்லை. இதனால், என்னைச் காண வந்த ‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிகையின் போட்டோ எடிட்டர் தேசிகன் கிருஷ்ணன் அவர்களின் கரங்களால் பொன்னாடை போர்த்தி, பாராட்டுச் சான்றிதழை வழங்கி மகிழ்ந்தேன்.
அன்புடன்,
முத்தாலங்குறிச்சி காமராசு


