நான் எழுதத் தொடங்கி கிட்டத்தட்ட 40 வருடங்கள் முடியப் போகிறது. எனக்கு எப்படியாவது ஒரு நாள் ‘ராணி முத்து’ இதழில் ஒரு நாவல் எழுதிவிட வேண்டும் என ஆசை. தொடர்ந்து முயற்சி செய்தேன்; என்னை நானே தயார்படுத்திக் கொண்டே இருந்தேன். அந்த ஆசை இப்போது நிறைவேறிவிட்டது.
வருகிற நவம்பர் 16-ந்தேதி ‘ராணி முத்து’ இதழில் நான் எழுதிய ‘பொண்ணே பொன்னோடு வா’ என்ற நாவல் வெளிவருகிறது. அதற்கான விளம்பரம் இந்த இதழில் வந்துள்ளது. மிக்க நன்றி.
எனது நாவலைத் தேர்ந்தெடுத்த ஆசிரியர் குழுவிற்கும், நிர்வாகத்திற்கும், வாசகப் பெருமக்களுக்கும் மிக்க நன்றி!
— முத்தாலங்குறிச்சி காமராசு


