தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகத் தூத்துக்குடி – மைசூர், செந்தூர், கொல்லம் சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
1. மைசூரிலிருந்து நவம்பர் 1 முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை புறப்படும் வண்டி எண் 06236 மைசூர் – தூத்துக்குடி சிறப்பு ரயிலிலும், தூத்துக்குடியிலிருந்து நவம்பர் 2 முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை புறப்படும் வண்டி எண் 06235 தூத்துக்குடி – மைசூர் சிறப்பு ரயிலிலும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.
2. சென்னை எழும்பூரிலிருந்து நவம்பர் 3ஆம் தேதி புறப்படும் வண்டி எண் 06105 சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் செந்தூர் சிறப்பு ரயிலிலும் திருச்செந்தூரிலிருந்து நவம்பர் 7ஆம் தேதி புறப்படும் வண்டி எண் 06106 திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் செந்தூர் சிறப்பு ரயிலிலும் திருநெல்வேலி ரயில் நிலையம் வரை ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.
3. சென்னை எழும்பூரிலிருந்து நவம்பர் 3ஆம் தேதி புறப்படும் வண்டி எண் 06101 சென்னை எழும்பூர் – கொல்லம் சிறப்பு ரயில் செங்கோட்டை ரயில் நிலையம் வரை ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.