சாத்தான்குளத்தில் பாதுகாப்பாக பட்டாசு விற்பனை செய்வது குறித்து காவல்துறை சார்பில் பட்டாசு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், பேய்குளம் பகுதியில் உள்ள பட்டாசு கடை உரிமையாளர்களிடம் அரசு விதிக்கு உட்பட்டு பாதுகாப்பாக பட்டாசு விற்பனை செய்வது குறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பாதுகாப்பாக பட்டாசு விற்பனை செய்வது குறித்தும், சீனா பட்டாசு விற்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதில் காவல் உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார், அருள் சாம்ராஜ் உள்ளிட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


