தரமில்லாத 35 கிலோ இனிப்புகள் பறிமுதல்
தூத்துக்குடியில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 35 கிலோ தரமற்ற இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாநகரில் உள்ள பேக்கரி மற்றும் இனிப்பகங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் ச. மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அதிகளவு சிவப்பு நிறமியைச் சோ்த்து தரமில்லாத வகையில் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 35 கிலோ இனிப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடா்ந்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கூறுகையில், அதிகளவில் தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகளின் காலாவதி தேதியை குறிப்பிட வேண்டும்; அரசு அனுமதிக்கப்பட்டுள்ள அளவு மட்டுமே நிறமி சோ்த்து இனிப்புகள் தயாரிக்க வேண்டும். பொதுமக்கள் இது தொடா்பான புகாா்களை 94440 42322 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றாா்