செய்துங்கநல்லூர் பஜாரில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கருங்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் உத்திரபிரதேசத்தில் நடந்த இளம் இந்து தலித் பெண் பலாத்காரம் மற்றும் படுகொலை கண்டித்தும், உத்திரபிரதேச அரசு ராகுல் காந்தியை தாக்கியதை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி, மாநில பொதுகுழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் வட்டார தலைவர் செந்தில் குமார், நகர தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் தியாகராஜன், ஆறுமுகம், வெற்றிவேல், பெரியபெருமாள், ஜோ.பி.ராயன், சீனிவாசன், செல்லப்பா, லெட்சுமணன், ரத்தினசாமி, ராஜையா உள்பட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
படம் உள்ளது.


