
வல்லநாடு அருகே ஆழிகுடி தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் திருட முயன்றவர்கள் மீது தாசில்தார் நடவடிக்கை எடுத்தார்.
ஆழிகுடி தாமிரபரணி ஆற்றில் 100 சாக்கு பையில் மணலை திருடுவதாக சப் கலெக்டர் சிம்ரன் ஜிப்சிங் பாலோனுக்கு தகவல் கிடைத்தது. அவர் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் வல்லநாடு வருவாய் ஆய்வாளர் மாசானமுத்து ஆகியோர் ஆழிகுடி தாமிரபரணி ஆற்றங்கரை கரைக்கு சென்றனர். அங்கு சுமார் 100 மூடையில் மண் அள்ளி வைக்கப்பட்ட இடத்துக்கு சென்றனர். அதற்குள் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
அந்த மணல் மூடைகள் வெட்டி,மணலை ஆறறிலேயே போட்டு விட்டனர். ஆற்றங்கரைக்கு செல்லும் வழியில் வைக்கப்பட்ட சி.சி.டி.வி கமரா மூலம் குற்றசெயலில் ஈடுபட்டவர்கள் யார் என தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, ஆற்றங்கரையில் மணல் திருட்டை தடுக்க அந்தந்த பஞ்சாயத்து மூலமாக சி.சி.டி.வி கமரா வைத்து கண்காணிக்கப்படுகிறது. மேலும் மணல் திருட்டை தடுக்க வருவாய் துறை மூலம் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. என்று அவர் கூறினார்.