ஸ்ரீவைகுண்டம் தாலூகா அலுவலத்தில் இரண்டு நாள்களில் அரசு சான்றிதழ் கிடைக்க தாசில்தார் கோபாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஆன்லைன் சேவை மூலமாக சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்றவை இதுபோலவே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு ஆன்லைனின் விண்ணப்பம் செய்தால், கிராமநிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் இருவரும் கையெழுத்திட்டு அதன் பின் தாசில்தார் கையெழுத்திட வேண்டும். சான்றிதழ்களை சரிபாகக குறைந்தது 1 வாரமாவது ஆகும். இது பள்ளி மாணவர்களுக்கு மிகவும் இடையூராக இருந்து வந்தது. இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தாராக கோபாலகிருஷ்ணன் பொறுப்பேற்றவுடன் பல அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதில் சான்றிதழை இரண்டு நாளில் வழங்க ஏற்பாடு செய்தார். இதற்காக ஸ்ரீவைகுண்டம் தாலூகா உள்ள உள்ள பஞ்சாயத்துகளில் பணிபுரியும் கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இருநாளில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியை ஸ்ரீவைகுண்டம் தாலூகா அலுவலகத்தில் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். துணை வட்டாட்சியர்கள் சிவகுமார், சங்கரநாரயணன் ஆகியோர் உடனிருந்தனர்.


