இந்தியாவிலேயே முதன் முறையாக ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சைட் மியூசியம் கடந்த வருடம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த சைட் மியூசியத்தை ஆதிச்சநல்லூருக்கு வருகை தந்து பார்வையிட்டு வருகின்றனர்.
திருச்செந்தூர் கோவிலுக்கு செல்பவர்களும் இங்கு வந்து சைட் மியூசியத்தை பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சைட் மியூசியத்தை பார்வையிட வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இராமானுஜம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவிகள் 30 பேர் பள்ளி ஆசிரியர்களுடன் சேர்ந்து ஆதிச்சநல்லூரில் உருவாக்கப்பட்டுள்ள சைட் மியூசியத்தை காண வருகை தந்தனர்.
அவர்கள் ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியத்தை பார்வையிட்டனர். சைட் மியூசியம் குறித்து மத்திய தொல்லியல் துறை பணியாளர் வெங்கடேஷ் மாணவிகளுக்கு விளக்கமளித்தார். சைட் மியூசியத்தை மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு, அகழாய்வு குழிக்குள் உள்ள முதுமக்கள் தாழிகள் குறித்து அங்கிருந்த பணியாளரிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.


