1826 – அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் தாமஸ் ஜெஃவ்வர்சன், 2ம் அரசுத்தலைவர் ஜான் ஆடம்ஸ் இறந்த அதே நாளில் இறந்தார்.
1827 – நியூயார் மாநிலத்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1837 – உலகின் முதலாவது அதி-தூர தொடர்வண்டிப் போக்குவரத்து, பர்மிங்காம், லிவர்பூல் நகர்களுக்கிடையே தொடங்கப்பட்டது.
1865 – ஆலிஸின் அற்புத உலகம் வெளியிடப்பட்டது.
1879 – ஆங்கிலோ-சூலு போர் உலுண்டி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரின் பின்னர் முடிவுக்கு வந்தது.
1886 – சுதந்திரச் சிலை பிரெஞ்சு மக்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தார்கள்.
1892 – சமோவா தனது பன்னாட்டு நாள் கோட்டில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன்படி, இவ்வாண்டு 367 நாட்களை அது கொண்டது. திங்கட்கிழமை, சூலை 4 இரண்டு நாட்களாக இருந்தது.
1918 – ரஷ்யாவின் சார் மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் போல்ஷெவிக்கினரால் கொல்லப்பட்டனர் (யூலியின் நாட்காட்டி).
1941 – நாசி ஜெர்மனியினரால் போலந்தில் “லூவோவ்” என்னும் இடத்தில் அறிவியலாளர்களும் எழுத்தாளர்களுமாக 45 பேர் கொல்லப்பட்டனர்.
1946 – 381 ஆண்டு குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் பிலிப்பீன்சு ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1947 – பிரித்தானிய இந்தியாவை இந்தியா, பாக்கித்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிக்கும் சட்டமூலம் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் முன்வைக்கப்பட்டது.
1951 – வில்லியம் ஷாக்லி இருமுனை சந்தி திரிதடையம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார்.
1976 – என்டபே நடவடிக்கை: உகாண்டாவில் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்த அனைவரையும் இசுரேலிய பாதுகாப்புப் படைகள் விடுவித்தனர்.
1988 – வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முதல் தமிழ் மாநாடு பென்சில்வேனியாவில் இடம்பெற்றது.
1997 – நாசாவின் பாத்ஃபைண்டர் விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கியது.
1998 – ஜப்பான் நொசோமி விண்கலத்தை செவ்வாய்க் கோளை நோக்கி அனுப்பியது.
2006 – டிஸ்கவரி விண்ணோடம் 18:37:55 UTC மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்டது.
2012 – இக்சு போசானை ஒத்த துணிக்கைகள் பெரிய ஆட்ரான் மோதுவியில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.


