தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா கருங்குளம் ஒன்றியம் கொங்கராயகுறிச்சி கிராமத்தில் வேத கோவில் தெருவிலும் மணல் மேட்டு தெருவிலும் கடந்த 15 தினங்களுக்கு மேல் தெரு விளக்கு எரியவில்லை முறையாக பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை இரவு நேரத்தில் விஷ பூச்சிகள் அவ்வப்போது வந்து சென்று பொதுமக்களை அச்சுறுத்தி செல்கிறது இதனால் பொதுமக்கள் ஆவேசமடைந்து எரியாத மின்கம்பங்களுக்கு மலர் வளையம் வைத்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர் நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் கண்ணன் மற்றும் மணல்மேடு தெரு வேத கோவில் தெரு பொதுமக்கள் கலந்து கொண்டனர்


